கோவை:
“ஊபா சிறைவாசிகளுக்கு எப்போது விடுதலை?” என்ற தலைப்பில் கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தலித் விடுதலைக் கட்சி, மக்கள் அதிகார கழகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
கருத்தரங்கில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், கு. ராமகிருஷ்ணன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சுசி கலையரசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர்.
🔴முக்கியமாக வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:
பீமா கோரேகான், CAA எதிர்ப்பு போராட்டம், பாப்புலர் பிரண்ட் உள்ளிட்ட அனைத்து ஊபா (UAPA) வழக்குகளிலும் சிறைபட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
ஊபா சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.
ஊபா சட்டத்தையே முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
National Investigation Agency (NIA)-வை கலைக்க வேண்டும்.
மேலும், அனைத்து மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளும் மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிய பாஜக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும்,
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைகளில் இக்கோரிக்கைகள் சேர்க்கப்பட வேண்டும் என்றும் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த கருத்தரங்கம் நடைபெற்றது.
கோவை மாவட்ட செய்தியாளர்: வேலுமணி