விழுப்புரம் – கண்டாச்சிபுரம்:
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் தாலுக்காவிற்கு உட்பட்ட பில்ராம்பட்டு ஊராட்சி, அப்பனந்தல் கிராமத்தில் உள்ள SS-2 KV-100-2 மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) கடந்த 40 நாட்களுக்கும் மேலாக பழுதடைந்த நிலையில் இருந்து வருவது அப்பகுதி விவசாயிகளிடையே கடும் அதிருப்தி மற்றும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
பழுதடைந்த மின்மாற்றி இதுவரை சரி செய்யப்படாமல் இருப்பதற்கு, கண்டாச்சிபுரம் உதவி மின் பொறியாளர் அலட்சியமே காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். தொடர்ந்து மனுக்கள் அளித்தும், நேரில் சென்று புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் படாததால், விவசாயிகள் கடும் நொந்து போயுள்ளனர்.
50 ஏக்கர் பயிர்கள் பாதிப்பு – நீர்ப்பாசனம் இன்றி காயும் விளைநிலங்கள்:
மின்மாற்றி பழுதடைந்ததன் காரணமாக, அப்பனந்தல் கிராமத்தைச் சுற்றியுள்ள சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர் உள்ளிட்ட விவசாயப் பயிர்கள் மின்சாரம் இல்லாததால் நீர்ப்பாசனம் பெற முடியாமல் காய்ந்து நாசமாகி வருகின்றன.
விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து, கூலி உள்ளிட்ட செலவுகளைச் செய்து கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள், தற்போது பயிர்கள் கண்முன்னே அழிவதை பார்த்து கண்ணீர் வடிக்கின்றனர். “ஒரு நாள், இரண்டு நாள் என்றால் பொறுத்துக் கொள்ளலாம்; ஆனால் 40 நாட்களாக மின்சாரம் இல்லாமல் இருப்பது எங்கள் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது” என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
அதிகாரிகள் கண்டும் காணாமல் – விவசாயிகள் குற்றச்சாட்டு:
பழுது நீக்கம் கோரி கடந்த 40 நாட்களாக கண்டாச்சிபுரம் மின்சார அலுவலகத்திற்கு நடையா நடந்து சென்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை என்றும், உதவி மின் பொறியாளர் விவசாயிகளை சந்திக்காமல் தவிர்த்து வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
மின் மாற்றியில் பழுதடைந்துள்ள இரண்டு மின்சாரப் பெட்டிகள் (பாகங்கள்) மட்டுமே மாற்றப்பட்டால் உடனடியாக மின்சாரம் வழங்க இயலும் நிலையில், அதற்கும் நடவடிக்கை எடுக்கப் படாதது விவசாயிகளை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
சிபிஎம் கட்சி கடும் கண்டனம் – முற்றுகைப் போராட்ட எச்சரிக்கை:
இந்நிலையில், விவசாயிகளின் பிரச்சினையில் தமிழக அரசு மற்றும் மின்சார வாரியம் கவனம் செலுத்த வேண்டும் என்றும்,
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அலட்சியப்படுத்தும் மின்சார அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) வலியுறுத்தியுள்ளது.
மேலும், பழுதடைந்த மின் மாற்றியை உடனடியாக சரிசெய்து இரண்டு மின்சாரப் பெட்டிகளை மாற்றி தாமதமின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என சிபிஎம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப் படாவிட்டால்,
அப்பனந்தல் கிளை, சு.பில்ராம்பட்டு சார்பில்
சம்பந்தப்பட்ட மின்சார அலுவலகம் முன்பு திடீர் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசின் தலையீடு அவசியம் – விவசாயிகள் கோரிக்கை:
விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதால்,மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக தலையிட்டு இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்களும் விவசாயிகளும் வலியுறுத்துகின்றனர்.
விழுப்புரம் மாவட்ட முதன்மை செய்தியாளர்
தமிழ். மதியழகன்