சென்னை:
1970களில் சென்னை நகரின் அழகான அடையாளமாக விளங்கிய இரட்டை அடுக்கு பேருந்துகள் (டபுள் டெக்கர் / மாடி பஸ்) மீண்டும் சென்னையின் சாலைகளில் ஓடவிருக்கின்றன. இந்த பேருந்து சேவையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
இதற்காக அஷோக் லேலண்ட் நிறுவனத்திடமிருந்து மொத்தம் 20 இரட்டை அடுக்கு பேருந்துகள் வாங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் கட்டமாக, இந்த மாடி பேருந்துகள் இரண்டு முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படலாம் என கூறப்படுகிறது.
அவை,
தாம்பரம் – பிராட்வே
கோயம்பேடு அல்லது அடையாறு – மாமல்லபுரம்
ஆகிய வழித்தடங்களாக இருக்கலாம் என்று போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த இரட்டை அடுக்கு பேருந்துகள் மின்சார பேருந்துகளாக (Electric Buses) இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது நடைமுறைக்கு வந்தால், சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, காற்று மாசும் கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பொதுப் போக்குவரத்தை நவீனப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த நகர போக்குவரத்தை உருவாக்கும் நோக்கத்துடனும் இந்த மாடி பேருந்துகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி மாவட்டம்
V. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி

