Sun. Jan 11th, 2026

தென்காசி | ஆலங்குளம் | டிசம்பர் 26

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஒன்றியம், மாறாந்தை கிராமத்திலிருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சிவலார்குளம் ஊராட்சிக்குட்பட்ட கரும்புளியூத்து கிராமத்திற்கு கொண்டு வரப்படும் குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால், கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

கரும்புளியூத்து கிராமத்தின் கீழ்புறம் அமைந்துள்ள குளத்துப் பகுதியில், கூட்டு குடிநீர் திட்டத்திற்கான பைப் லைன் தானாக உடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், கரும்புளியூத்து கிராமம் மற்றும் சிவலார்குளம் ஊராட்சிக்கு வழங்க வேண்டிய குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது.

மேலும், மாறாந்தை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட தொட்டி, தொடங்கிய காலம் முதல் அடிக்கடி பைப் லைன் சேதமடைவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். இதனால், குடிநீர் தட்டுப்பாடு அடிக்கடி ஏற்பட்டு, பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு,

குடிநீர் குழாய் தானாக உடையும் காரணத்தை கண்டறிந்து ஆய்வு செய்யவும்,உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும்,பொதுமக்களுக்கு தடையில்லா குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (TWAD Board) தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவலார்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பணிவுடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த பிரச்சினை உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால், குடிநீர் தட்டுப்பாடு மேலும் தீவிரமடையும் அபாயம் உள்ளது என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மணிகண்டன்
நிருபர், ஆலங்குளம் தாலூகா
தென்காசி மாவட்டம்

🔴 முக்கிய அரசு அதிகாரிகள் கவனத்திற்கு:
@CMOTamilNadu – தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகம்
@TNDistricts – மாவட்ட நிர்வாகம்
@TenkasiCollector
@TWADBoard – தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்
@MAWSdept – நகராட்சி நிர்வாகம் & குடிநீர் துறை
@RuralDevTN – ஊரக வளர்ச்சி துறை
🏛️ உள்ளூர் நிர்வாக & அரசியல் பிரதிநிதிகள்
@TenkasiMLA (உங்கள் தொகுதி MLA handle)
@PanchayatDeptTN
@TNChiefSec – தலைமைச் செயலாளர்
@TN_MAdept

By TN NEWS