
சென்னை | டிசம்பர் 24, 2025.
தென் தமிழக மக்களின் நீண்டகால பயண தேவைகளை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை பொதுமக்கள் வசதியை முதன்மைப்படுத்தி, நாகர்கோவில் – சென்னை வழித்தடத்தில் புதிய வால்வோ பேருந்து சேவையை நாளை மறுநாள் 24.12.2025 முதல் தொடங்க உள்ளது.
இயக்கத்திற்கு வரவிருக்கும் 20 புதிய வால்வோ பேருந்துகளில், இரண்டு பேருந்துகள் இந்த முக்கிய வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன. இந்த சேவையின் முதல் இயக்கத்தை, சென்னை தீவுத்திடலில் காலை 10 மணிக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார்.
பயணிகளுக்கான முக்கிய வசதிகள்:
இந்த புதிய வால்வோ பேருந்து சேவை மூலம்,
நீண்ட தூரப் பயணங்களில் உடல் சோர்வை குறைக்கும் வசதியான இருக்கைகள்
பாதுகாப்பான மற்றும் சீரான பயண அனுபவம்
நேர்த்தியான அட்டவணை மூலம் நேர சேமிப்பு
அரசு போக்குவரத்துக் கழகத்தின் நம்பகமான சேவை
என பொதுமக்கள் நேரடியாக பயன்பெற முடியும்.
பயணக் கட்டண விவரம்:
பயணிகளின் வசதி மற்றும் செலவு சமநிலையை கருத்தில் கொண்டு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன:
சென்னை – ரூ. 1275
திருநெல்வேலி – ரூ. 1135
மதுரை – ரூ. 845
திருச்சி – ரூ. 625
இந்த வழித்தடத்தில் மொத்தம் 19 ஸ்டேஜ்கள் உள்ளதாகவும், பயணிகள் அதிகம் பயன்படுத்தும் நகரங்களை இணைக்கும் வகையில் அட்டவணை தயாரிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் வரவேற்பு:
இந்த சேவை தொடங்குவதன் மூலம், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி பயணம் செய்வோர், வேலைக்காகச் செல்லும் ஊழியர்கள், மாணவர்கள், நோயாளிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என பல்வேறு தரப்பினருக்கும் அதிக பயன் கிடைக்கும் என பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஷேக் முகைதீன்
இணை ஆசிரியர்
