பாலக்கோடு மாட்லாம்பட்டியில்,
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு – மாட்லாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர்,
தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர்
வழக்கறிஞர் ஆ. மணி, எம்.பி. அவர்கள்,
பள்ளி மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி விழாவை சிறப்பித்தார்.
நிகழ்வில் கலந்து கொண்டோர்.
பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்–ஆசிரியர் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள் மற்றும் நிர்வாகிகள்
ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்த நலத்திட்டம், மாணவியர்களின் கல்வி தொடர்ச்சிக்கும், பாதுகாப்பான பயணத்திற்கும் பெரும் ஆதரவாக அமைகிறது.
✍️ மண்டல செய்தியாளர்
D. ராஜீவ்காந்தி

