Sat. Jan 10th, 2026

தர்மபுரி | 20.12.2025

தர்மபுரி கிழக்கு மாவட்டம், பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் உயர் சிறப்பு மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. R. சதீஷ், இ.ஆ.ப. அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சி தொடக்கம்:

இந்நிகழ்வை தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளரும், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் திரு. ஆ. மணி, எம்.பி. அவர்கள் தொடங்கி வைத்தார்.

பாப்பாரப்பட்டி பேரூர் கழகச் செயலாளர் திரு. எஸ்.ஆர். பிரகாஷ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள்:

இந்த நிகழ்ச்சியில்,

பாப்பாரப்பட்டி பேரூராட்சி தலைவர் திருமதி பிருந்தா நடராஜன்,

தர்மபுரி மேற்கு நகர பொறுப்பாளர் திரு. எம்.பி. கௌதம்,

முன்னாள் நகர கழகச் செயலாளர் திரு. திருவேங்கடம்,

பாப்பாரப்பட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் விஜய் ஆனந்த், தமிழ்செல்வி முனுசாமி, தமிழ்ச்செல்வன், தனசேகரன், தர்மன்,

பென்னாகரம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் திரு. R. ராகுல் பிரசாத்,

பென்னாகரம் வடக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி திரு. கிருஷ்ணசாமி,

மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் திருமதி சித்ரா,

மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் திரு. தர்மன்,

மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர்கள் திரு. பாண்டியன், திரு. சி.கே. சரவணன்,

திருமதி சுதா,

பிரபு ரைஸ் மில் – முருகன், துரை, பொன்னுசாமி,

நகர இளைஞரணி துணை அமைப்பாளர் திரு. விக்னேஷ்,

நகர தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் திரு. பிரவீன் குமார்,

ஒன்றிய வழக்கறிஞர் அணி அமைப்பாளர் திரு. லோகேஷ் குமார்,

கழக நிர்வாகிகள் வஜ்ரவேல், பாஸ்கரன், தனசேகரன்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முகாமின் நோக்கம்:

இந்த மருத்துவ முகாமின் மூலம், பொதுமக்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை, சிறப்பு மருத்துவ ஆலோசனை மற்றும் தேவையானவர்களுக்கு மேல்சிகிச்சை பரிந்துரை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி இதுபோன்ற முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மண்டல செய்தியாளர்
D. ராஜீவ் காந்தி

By TN NEWS