Sat. Jan 10th, 2026

தருமபுரி | 20.12.2025

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாமை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பழங்குடியினர் நல வாரிய அடையாள அட்டைகள் வழங்கல்:

இந்த முகாமின் போது, பழங்குடியினர் மக்களுக்கு பழங்குடியினர் நல வாரிய அடையாள அட்டைகள் மாவட்ட ஆட்சித்தலைவரால் வழங்கப்பட்டன. அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் உரிய பயனாளர்களை சென்றடைய வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்:

இந்த நிகழ்ச்சியில்,

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி,

பாப்பாரப்பட்டி பேரூராட்சி தலைவர் திருமதி பிருந்தா,

துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு. இராஜேந்திரன்,

மாவட்ட / வட்ட பழங்குடியினர் நல அலுவலர் திரு. ஆ.க. அசோக்குமார்,

பென்னாகரம் அரசு தலைமை மருத்துவர் மருத்துவர் கனிமொழி,

அரசுத்துறை அலுவலர்கள்,

இந்நாள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்,

மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முகாமின் முக்கியத்துவம்:

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் மூலம், பொதுமக்கள் குறிப்பாக கிராம மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் வசிக்கும் மக்கள், இலவச முழு உடல் பரிசோதனை, ஆரம்ப நிலை நோய் கண்டறிதல் மற்றும் உரிய மருத்துவ ஆலோசனைகள் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மண்டல செய்தியாளர்
D. ராஜீவ்காந்தி

By TN NEWS