Fri. Jan 16th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் – 18வது மாவட்ட மாநாடு.

குடியாத்தம், செப்டம்பர் 14:இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வேலூர்-திருப்பத்தூர் மாவட்டத்தின் 18வது மாநாடு குடியாத்தம் அசோக் நினைவரங்கம், போடி பேட்டை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சங்கத்தின் மாவட்ட பொருளாளர் கோட்டிஸ்வரன் அவர்கள்…

தமிழ்நாடு டுடே செய்தியாளருக்கு வ.உ.சி விருது…! வாழ்த்துக்கள் 💐

📰 வாழ்த்துக்கள் 📰 தமிழ்நாடு டுடே செய்தியாளர்திரு. க. அல்போன்ஸ் – அரக்கோணம் பத்திரிகைத் துறையில் ஆற்றிய சிறப்பான சேவைக்கு“கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி விருது”வழங்கப்பட்டிருப்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். உண்மை, நேர்மை, சமூக அக்கறையுடன் செய்தியாற்றும்அவரது பணி அனைவருக்கும் முன்மாதிரியாகும். தமிழ்நாடு…

காடு காக்கும் கடுமையான எச்சரிக்கை!

கு‌டியாத்தம் காப்புக்காட்டில் அனுமதியின்றி முரம்பு கொட்டிய தொழிலதிபருக்கு ரூ.1 லட்சம் அபராதம்…? குடியாத்தம், செப். 13சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் வெறும் காகிதத்தில் மட்டுமே இல்லாமல், நடைமுறையில் கடுமையாக செயல்படுத்தப்படுகிறது என்பதை குடியாத்தத்தில் நிகழ்ந்த சமீபத்திய சம்பவம் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. வேலூர் வனக்கோட்டம்…

சமஸ்கிருதமும் மருத்துவமும்…!

பனகல் அரசரும் சமஸ்கிருத மாநாடும் தமிழ்நாட்டின் மருத்துவக் கல்வி வரலாற்றை மாற்றிய ஒரு தீர்மானம் அறிமுகம்: வரலாற்றில் சில தருணங்கள், ஒரு மனிதரின் துணிச்சலான முடிவால் தலைமுறைகளின் எதிர்காலத்தை மாற்றுகின்றன.80 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் நடந்த ஒரு சமஸ்கிருத மாநாட்டில் நிகழ்ந்த…

வேலூரில் “நலம் காக்கும் ஸ்டாலின்” – மகா மருத்துவ முகாம்.

வேலூர், செப்.14:வேலூர் மாவட்டம் குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில், “தமிழ்நாடு முதலமைச்சர் நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற தலைப்பில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு…

ராஜஸ்தான் மதமாற்றத் தடைச் சட்டம் – கொடூரமானது, அரசமைப்புக்கு எதிரானது: எஸ்டிபிஐ கண்டனம்.

தென்காசி, செப்டம்பர் 9:ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்தில் அவசரமாக நிறைவேற்றப்பட்ட *மதமாற்றத் தடை மசோதா (2025)*க்கு எஸ்டிபிஐ (SDPI) கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் யாஸ்மின் ஃபரூக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 9 அன்று எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில், விவாதமின்றி நிறைவேற்றப்பட்ட…

நெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையம் செயல்படக்கூடாது – மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பரிந்துரை.

திருநெல்வேலி:மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி இன்றி செயல்பட்டு வருவதால், நெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையம் இனி செயல்படக்கூடாது என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சமீபத்தில் பேருந்து நிலையத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அரசின் முறையான அனுமதி இன்றி அங்கு…

குடியாத்தத்தில் அத்தி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்

குடியாத்தம், செப்டம்பர் 12:குடியாத்தம் ராபின்சன் பூங்கா அருகே அத்தி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாம், அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மற்றும் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் பெ. சௌந்தரராஜன் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஏற்பாடு செய்யப்பட்டது.…

குடியாத்தம் அருகே டாஸ்மாக் பாட்டில்களை கள்ளச் சந்தையில் விற்றவர் கைது

குடியாத்தம், செப்டம்பர் 12:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பாக்கம் பஸ் நிலையம் பகுதியில், தமிழக அரசின் டாஸ்மாக் மது பாட்டில்கள் கள்ளச் சந்தையில் கூடுதல் விலையில் விற்பனை செய்யப்படுவதாக பரதராமி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீஸார் இன்று பாக்கம் பஸ்…

குடியாத்தத்தில் 95 வயது மூதாட்டியின் கண்கள் தானம்.

குடியாத்தம், செப்டம்பர் 12:வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி சங்க உறுப்பினர் என்.சி. ஸ்ரீதர் அவர்களின் பாட்டி (தந்தையின் தாயார்) எம். சாலம்மாள் (வயது 95) இன்று விடியற்காலையில் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். அவரது குடும்ப உறுப்பினர்கள் ஒப்புதலுடன், மறைந்த…