வேலூர், செப்.14:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில், “தமிழ்நாடு முதலமைச்சர் நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற தலைப்பில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பல்வேறு மருத்துவ பரிசோதனைகளையும் ஆலோசனைகளையும் பெற்றனர்.
முகாமில் கலந்து கொண்டு பார்வையிட்டவர்கள்:
சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை கூடுதல் செயலாளர் டாக்டர் ச. உமா, இ.ஆ.ப.
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப.
மேலும், நிகழ்வில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன், நகர மன்றத் தலைவர் சௌந்தரராஜன், ஒன்றியக்குழுத் தலைவர் சத்யானந்தம், வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, நகர மன்ற உறுப்பினர்கள் நவீன் சங்கர், எம். எஸ். குகன், நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன், வட்டாட்சியர் பழனி ஆகியோரும் பங்கேற்றனர்.
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பொதுமக்களுக்கு இலவசமாக அனைத்து விதமான பரிசோதனைகளும் சிகிச்சை ஆலோசனைகளும் வழங்கினர். பொதுமக்கள் வசதிக்காக குடியாத்தம் நகராட்சி சார்பில் முகாமில் தேவையான அனைத்து அடிப்படை ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்