Sun. Oct 5th, 2025



குடியாத்தம், செப்டம்பர் 14:
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வேலூர்-திருப்பத்தூர் மாவட்டத்தின் 18வது மாநாடு குடியாத்தம் அசோக் நினைவரங்கம், போடி பேட்டை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சங்கத்தின் மாவட்ட பொருளாளர் கோட்டிஸ்வரன் அவர்கள் சங்கக் கொடியை ஏற்றி வைத்தார்.

மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் திலீபன் தலைமையேற்றார். தலைமைக்குழு உறுப்பினர்கள் மரியானஸ் ஜெகநாதன், கே.வி. குப்பம் நவீன், கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

குடியாத்தம் நகர தலைவர் ஜெயக்குமார் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன், மாநில செயற்குழு உறுப்பினர் மதன், மாவட்ட செயலாளர் (பெ) சூர்யா சக்திவேல், மாநில குழு உறுப்பினர் பார்த்தீபன், மாவட்ட செயலாளர்கள் சங்கர், நவீன், உசேன் பாஷா, மாநில துணைத் தலைவர் சந்துரு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வேலூர்-திருப்பத்தூர் மாவட்டம் முழுவதிலிருந்தும் சங்க இளைஞர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

இறுதியில் புவனேஸ்வரி பேட்டை கிளைச் செயலாளர் புகழ்ராஜ் நன்றியுரை ஆற்றினார்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS