Sun. Oct 5th, 2025

 


திருநெல்வேலி:
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி இன்றி செயல்பட்டு வருவதால், நெல்லை ஜங்ஷன் பேருந்து நிலையம் இனி செயல்படக்கூடாது என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சமீபத்தில் பேருந்து நிலையத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அரசின் முறையான அனுமதி இன்றி அங்கு உணவகம், ஓட்டுநர் அறை, கழிப்பறைகள் திறக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதனை அடுத்து, நிலையத்தில் இயங்கி வரும் கடைகள் மற்றும் வசதிகளை மூடுவதற்கான பரிந்துரை, நெல்லை மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தலைமையகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதிகாரிகள் கூறுகையில், “சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளின் கீழ் தேவையான அனுமதி பெறாமல் எந்த வசதியும் இயங்கக்கூடாது. எனவே, உடனடியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

அமல்ராஜ்,

தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்

By TN NEWS