Tue. Aug 26th, 2025



பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளின் பரிந்துரையை ஏற்று ஜூலை 31.ம் தேதி தண்ணீர் திறக்க அரசாணையை வெளியிட வேண்டும்.

பவானிசாகர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்னும் கன மழை இருக்கும் என்பதால், நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உபரி நீர் பவானி ஆற்றின் வழியாக வீணாக காவிரியில் செல்லும் நிலை உள்ளது. எனவே இந்த ஆண்டு முன்கூட்டியே கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என  தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.

அணை நிறைந்து உபரி நீர் வெளியேறி வரக்கூடிய அதே நிலையில், பாசனப் பகுதிகளில் இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் கடும் வறட்சி நிலவுகிறது.  நடப்பு பயிர்களான கரும்பு மஞ்சள், தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கும் நிலையில் உள்ளது. எனவே அவற்றை பாதுகாப்பதற்கும்,  இந்த ஆண்டு நெல் சாகுபடி துவங்குவதற்கும், கீழ் பவானி அணையிலிருந்து உபரி்நீர் வீணாக செல்வதை கருத்தில் கொண்டு  முன்கூட்டியே ஜூலை 31.ல் தண்ணீர் திறப்பை எதிர்பார்க்கின்றோம். இது தொடர்பாக அமைச்சர்கள் திரு. சு.முத்துசாமி மற்றும் திரு.மு.பெ.சாமிநாதன் ஆகியோருக்கும், ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளிடமும்  கோரிக்கை விடுத்திருந்தோம். இதன் அடிப்படையில் அமைச்சர்கள், 3 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் அணையில் இருந்து கால்வாயில் தண்ணீர் திறப்பதற்கான பரிந்துரையை அரசுக்கு அனுப்பி உள்ளனர். எனவே அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகம் அனுப்பிய பரிந்துரையின் படி ஜூலை 31.ம் தேதி தண்ணீர் திறப்பதற்கான ஆணையை அரசு உடனடியாக வெளியிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்…

இப்படிக்கு.
சுப்பு
மாவட்ட செயலாளர். தமிழக விவசாயிகள் சங்கம். ஈரோடு

By TN NEWS