Tue. Aug 26th, 2025


*தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெறும்போது சிபில் ரிப்போர்ட் பார்க்கப்படும் & NOC , வேண்டும் என்கிற உத்தரவு ரத்து &  விவசாயிகளின்  போராட்டம் மாபெரும் வெற்றி*
—————————————-
உயிரினும் மேலான உழவர் உறவுகளுக்கு,

கடந்த 28 5 2025 அன்று தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் விவசாயிகளின் விரோதி நந்தகுமார் ஐஏஎஸ் கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் பார்க்கப்படும் என அறிவிப்பு செய்து விவசாயிகளுடைய வாழ்வாதாரத்தில் மிகப்பெரிய இடியை இறக்கினார், அதை எதிர்த்து உடனடியாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஜுன் – 6 அன்று கண்டன அறிக்கை பதிவு செய்தது.

24 மாவட்டங்களில் சங்கத்தின் சார்பில் ஜுன் – 09 தேதி உடனடியாக ரத்து செய்யக் கோரி மனு கொடுக்கும் இயக்கமும் நடைபெற்றது.

அதன் பின்பு சிபில் ஸ்கோர் பார்க்கப்படாது எனவும், சிவில் ரிப்போர்ட் மட்டும் பார்ப்போம் என மாறுதல் செய்து உத்தரவிட்டார்.

இரண்டுமே ஒன்றுதான் என்பதை மீண்டும் வலியுறுத்தி

ஜுன் – 11 அன்று சென்னையில் கூட்டுறவு சங்கத்தின் மாநில பதிவாளர் அவர்களை சந்தித்து உத்தரவை ரத்து செய்யக்கோரி மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.

அதன்பின்பு ஜுன் – 24 அன்று திருச்சியில் 10க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஒன்று கூடி சிபில் ரிப்போர்ட் பார்க்கப்படும் என்கிற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என செய்தியாளர் சந்திப்பின்  வாயிலாக தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன் பின்பு ஜுன் – 30 அன்று குளித்தலையில் குளித்தலை விவசாயிகள் குழு – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் – தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் இணைந்த கோரிக்கை பேரணியும் நடைபெற்றது.

25 விவசாய சங்கங்களை ஒருங்கிணைப்பு செய்து ஜுலை – 10 சென்னையில் ஒரு கண்டன உண்ணாவிரத போராட்டமும் நடைபெற்றது.

தொடர்ச்சியாக விவசாயிகள் யாரும் கூட்டுறவு சங்கங்களில்  இந்த பிரச்சனை தீரும் வரை கடனை கட்டக் கூடாது எனவும் சங்கத்தின் சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டது.

இந்த கோரிக்கைக்காக பல்வேறு அமைப்புகளும், சங்கங்களும், அரசியல் கட்சிகளும் ஆதரவாக அறிக்கை செய்தும், விவசாயிகள் விரோதி நந்தகுமார் ஐஏஎஸ் விவசாயிகளை வஞ்சிக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார், கூட்டுறவு சங்கங்களை விட்டு விவசாயிகளை விரட்டி அடிக்க வேண்டும், வட்டிக்காரர்களிடம் சொத்துக்களை அடமானம் வைத்து சொத்துக்களை இழக்க வைக்க வேண்டும் என நோக்கத்தோடு செயல்பட்டு வந்தார்

இன்று தமிழ்நாடு அரசு கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெறுவதற்கு பழைய நடைமுறையே தொடரும் என அறிவிப்பு செய்துள்ளது.

  இந்த வெற்றி விவசாய சங்கங்களின் ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து விவசாய சங்க தலைவர்களுக்கும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், உழவர் போராளிகள், உறுப்பினர்கள் என அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் சங்கத்தின் மாநில குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒன்றுபட்டு போராடினால் வெற்றி உறுதி என்பதை இந்த போராட்டம் நமக்கு உணர்த்தி உள்ளது.

இப்படிக்கு,
வழக்கறிஞர் ஈசன் முருகசாமி
நிறுவனர் – இரா. சண்முகசுந்தரம் மாநில தலைவர்
சு. முத்துவிஸ்வ நாதன் – மாநில பொதுச் செயலாளர்

*தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்*

 

சேக் முகைதீன் – இணை ஆசிரியர்

 

 

By TN NEWS