Tue. Jul 22nd, 2025

செய்தி வெளியீடு -139/2025              நாள்: 21.07.2025
பத்திரிகை செய்தி:

உலக காவல் மற்றும் தீயணைப்பு விளையாட்டு போட்டிகள்-2025, அமெரிக்காவின் அல்பாமா மாகாணத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி முதல் இம்மாத 06-ம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் அகில இந்திய காவல்துறை விளையாட்டு அணி சார்பாக தமிழக காவல் துறையிலிருந்து காவலர்கள் v. தினேஷ். S. அர்ஜூன் மற்றும் B. ஹரிகிருஷ்ணன். பெண் காவலர்கள் K . இளவரசி மற்றும் V. சரண்யா ஆகியோர் பங்குபெற்று முறையே 3-தங்கம், 4-வெள்ளி மற்றும் 4-வெண்கலம் ஆக மொத்தம் 11 பதக்கங்களை வென்றுள்ளனர்.


மேலும்,  இதே போட்டியில் வயது வகைப் பிரிவில்                      திரு. மயில்வாகனன். இ.கா.ப, காவல் கண்காணிப்பாளர் உடன் 6-ஆய்வாளர்கள், 1-சார்பு ஆய்வாளர், 1-சிறப்பு சார்பு ஆய்வாளர், 4-தலைமை காவலர் மற்றும் 3-பெண் தலைமை காவலர் ஆகியோர் பங்கு பெற்று முறையே 19-தங்கம், 11-வெள்ளி மற்றும் 9-வெண்கலம் ஆக மொத்தம் 39 பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கும். தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.


மேற்கண்ட வீரர் மற்றும் வீராங்கனைகளை                        உயர்திரு. காவல்துறை தலைமை இயக்குநர். படைத்தலைவர். தமிழ்நாடு, திரு சங்கர் ஜிவால் இகாப, அவர்கள் நேரில் அழைத்து பதக்கம் வென்ற அனைவரையும் பாராட்டினார். திருமதி B. விஜய குமாரி, இ.கா.ப., காவல்துறை தலைவர், (ஆயுதப்படை) மற்றும் திரு. பிரவீன் குமார் அபினபு, இ.கா.ப., காவல்துறை தலைவர், (பொது)  ஆகியோர் உடனிருந்தனர்.

சுதாகர் – துணை ஆசிரியர்.

By TN NEWS