Tue. Jul 22nd, 2025


சென்னை, ஏப்ரல் 14, 2025:

தாகம் தீர்க்கும் தமிழன் ஃபௌண்டேசன் அமைப்பின் சார்பில் வருடந்தோறும் கோடைக் காலத்தில் நடத்தப்படும் “கோடைகால நீரூற்று” திட்டம், இந்தாண்டும் இன்று தமிழ் புத்தாண்டும், சட்டமாமேதை அம்பேத்கர் ஜெயந்தியும் ஒட்டிய நாளில், ஐஸ் ஹவுஸ் பகுதியில் சிறப்பாக துவக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி பழச்சாறு போன்ற குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. கோடையின் தாக்கத்தை சமாளிக்க சமூக தன்னார்வலர்கள் இணைந்து செயல்படுவதில் தமிழன் ஃபௌண்டேசன் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது.

இந்நிகழ்வுக்கு முன்னதாக, அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் அம்பேத்கர் ஜெயந்தி விழாவும் நடைபெற்றது. இதில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சட்டமாமேதை அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு புஷ்பாஞ்சலி செலுத்தினர்.

விழாவில் பேசிய கூட்டமைப்பினர், “சட்டமாமேதை அம்பேத்கர், கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போன்ற தேசியத் தலைவர்களை ஜாதி அடிப்படையில் அல்லாது, தேசிய மக்களின் பொதுத்தலைவர்களாக அனைவரும் ஏற்க வேண்டும்” என்று வலியுறுத்தினர். இந்த விழா, அதன் நோக்கை உணர்த்தும் ஒரு சிறந்த முன்னெடுப்பாக அமைந்தது.

நிறுவனர்:
ஆர். சுதாகர்
தமிழன் ஃபௌண்டேசன்

By TN NEWS