Wed. Aug 20th, 2025



குடியாத்தம், ஜூலை 22:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரின் 29-ஆவது வார்டில் அமைக்கப்பட்ட புதிய பகுதி நேர நியாய விலை கடை இன்று காலை திறக்கப்பட்டது.

இந்த கடையை, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திரு. அமுலு விஜியன் அவர்கள் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அவர்களில்:

நகர மன்றத் தலைவர் எஸ். சௌந்தரராஜன்

அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் கல்லூர் ரவி

நகர மன்ற உறுப்பினர் அரசு கூட்டுறவுத்துறை சார் பதிவாளர் தனலட்சுமி

வட்ட வழங்கல் அலுவலர் ஏ. பிரகாசம்

தொடக்க வேளாண்மை கூட்டுறவுத்துறை செயலாளர் சந்தோஷ் ஆகியோர் அடங்குவர்.

மற்றும் பொதுமக்கள் பெரிதும் பங்கேற்றனர்.

– குடியாத்தம் செய்தியாளர் K.V. ராஜேந்திரன்

By TN NEWS