Tue. Jul 22nd, 2025

திருப்பூர் மாவட்டம், மூலனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆண்டிகாட்டு தோட்டம், பாறைகடை பகுதியில், செல்லாத்தாள் (72) என்பவர் தனது காய்கறி கடையில் இருந்த போது 02.03.2025 அன்று மாலை, கொள்ளையர்கள் 5.5 சவரன் தங்க தாலி கொடியை பறித்து இருசக்கர வாகனத்தில் தப்பியோடினர்.

இந்த சம்பவம் குறித்து மூலனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதன்படி, கொள்ளையில் ஈடுபட்டதாக ரதின்பூரி (21), தந்தை: ராமச்சந்திரன், கள்வேலிப்பட்டி வடக்கு தெரு, அலங்காநல்லூர், மதுரை என்பவரை கைது செய்து, 23.03.2025 அன்று நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளியை பிடிக்க போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு டுடே செய்தியாளர் – திருப்பூர் மாவட்டம்.

சரவணகுமார்.

By TN NEWS