Tue. Jul 22nd, 2025

ஹாலிவுட், மார்ச் 25:

டிஸ்னியின் ‘ஸ்னோ ஒயிட்’ திரைப்படம், பல சர்ச்சைகளை சந்தித்த பின்னர் திரையரங்குகளில் வெளியானது. 1937ல் அனிமேஷன் படமாக வெளியான ‘Snow White and the Seven Dwarfs’ கதையை 2025ல் லைவ்-ஆக்ஷன் படமாக டிஸ்னி உருவாக்கியது. ஆனால், இது எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை.

ஏழு குள்ளர்கள் – மாறிய கதையும், எதிர்ப்பும்

பழைய படங்களில் இருந்த ஏழு குள்ளர்கள் கேரக்டர்களை நீக்குவதில் இருந்து படத்திற்கு எதிர்ப்பு தொடங்கியது. ‘Game of Thrones’ புகழ் நடிகர் பீட்டர் டின்கலேஜ் (Peter Dinklage), குள்ளர்களை தனியாக ஒரு குழுவாக காட்டுவதை எதிர்த்து கண்டனம் தெரிவித்ததால், டிஸ்னி “ஏழு குள்ளர்கள்” என்பதை “ஏழு மேஜிக்கல் மக்கள்” என மாற்றியது.

இதனால், ஹாலிவுட்டில் உள்ள குள்ள நடிகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். “நாம் கதாபாத்திர வாய்ப்புகளே இல்லாமல் இருக்க, இந்த முக்கிய கதாபாத்திரங்களையும் நீக்கிவிட்டீர்கள்” என்று விமர்சனம் செய்தனர். சர்ச்சைக்கு காரணமான ஏழு நடிகர்களை மாற்றி, C.G. தொழில்நுட்பம் மூலம் குள்ளர்களை உருவாக்கி படத்தை மீண்டும் படம்பிடிக்க டிஸ்னி தயாராயினர்.

இஸ்ரேல்-பாலஸ்தீன் விவகாரம் – நடிகர்கள் கருத்து சர்ச்சை

இதே நேரத்தில், படத்தில் தோழி வேடம் பூண்ட Gal Gadot (கல் கடாட்) ஒரு இஸ்ரேல் குடிமகள், நாயகி Rachel Zegler (ரேச்சல் ஜெக்லர்) பாலஸ்தீன் ஆதரவு கருத்துக்கள் தெரிவித்ததால், இஸ்ரேல், பாலஸ்தீன் ஆதரவாளர்கள் படத்தை புறக்கணிக்க தொடங்கினர்.

கதை மாற்றம் – ரசிகர்கள் அதிர்ச்சி

பழைய கதையில் இளவரசன் (Prince Charming) ஸ்னோ ஒயிடை காப்பாற்றி திருமணம் செய்யும் கதை. ஆனால், இந்த புதிய படத்தில் இளவரசனை முழுவதுமாக நீக்கி, ஒரு திருடனை ஸ்னோ ஒயிட் காதலிக்கிறார் என திரைக்கதை மாற்றப்பட்டது. இது, Prince Charming ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தோல்வியில் முடிந்த மாபெரும் திட்டம்!

தயாரிப்பு செலவாக 50 கோடி டாலர் (₹6,600 கோடி) எதிர்பார்த்தது. ஆனால், தற்போது 4.3 கோடி டாலர் (₹350 கோடி) மட்டுமே வசூலாகி, படம் வணிக ரீதியாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.

டிஸ்னியின் படங்கள் வெற்றியடைந்தால், பொம்மைகள் விற்பனை, தீம் பார்க் டிக்கெட்டுகள், தொடர்புடைய பொருட்கள் என பெரிய அளவில் வருவாய் வரும். ஆனால், இந்த படம் தோல்வியடைந்ததால், அந்த மெகா பிசினஸ் முற்றிலும் நஷ்டமாகி உள்ளது.

கதை மாற்றம் – காலத்துக்கு ஏற்றது? ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

பழைய கதைகளை புதிய தலைமுறைக்கு புதிய பார்வையில் சொல்ல வேண்டும் என்றாலும், அதிகமான மாற்றங்கள் செய்தால் ரசிகர்களை திருப்திப்படுத்த முடியாது என்பதையும், டிஸ்னியின் ‘ஸ்னோ ஒயிட்’ தோல்வி நிரூபித்துள்ளது.

இணை ஆசிரியர் –  Dr.சேக்முகைதீன்

By TN NEWS