திருப்பூர் மாவட்டம், அவிநாசிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரூர் – கோவை ரோடு, காரப்பாளையம் பிரிவில் கடந்த 05.03.2025 அன்று நடைபெற்ற ரூ.1,10,00,000/- கொள்ளை வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த அலாவுதீன் (53), தந்தை: அப்துல் வகாப், பாரத் தெரு, பெரியபாளையம், குளித்தலை, கரூர் என்பவரை 24.03.2025 அன்று போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து கொள்ளைக்கு பயன்படுத்திய கார் மற்றும் ரூ.1,20,000/- பணம் கைப்பற்றப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் இதுவரை ரூ.99,16,000/- மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு டுடே செய்தியாளர் – திருப்பூர் மாவட்டம்.
சரவணக்குமார்.