Sat. Jan 10th, 2026

உசிலம்பட்டி
18.01.2025

*உசிலம்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது*

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.,

இதில்  உசிலம்பட்டி நகர அரிமா சங்கம், தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற ஆசிரியர் அலுவலர் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.,

இதில் கண் புரை நோயாளிகளுக்கு இலவச பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை செய்து இலவசமாக விழி லென்ஸ் வழங்கப்பட்டது .மேலும் கண் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டது.,

இந்த முகாமில் உசிலம்பட்டி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு  பயன்பெற்றனர்.,

வீர சேகர் – மதுரை மாவட்டம் செய்தியாளர்.

By TN NEWS