கடலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி, தேர்தல் காலம் வந்துவிட்டாலே அரசியல் கட்சிகளின் கவனமும், ஊடகங்களின் மையப் பார்வையும் ஒரே நகரத்தில் சுருங்கிவிடுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த நகரம் சிதம்பரம்.
ஆனால், அதே தொகுதியின் வரலாறு, பொருளாதாரம் மற்றும் மக்கள் வாழ்வின் அடையாளமாக விளங்கும் (Porto Novo) தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்ற வலுவான கருத்து மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
நிழலில் மறைந்து கிடக்கும் பகுதி:
சிதம்பரம் தொகுதி குறித்து பேசும்போது பெரும்பாலும் நடராஜர் கோயில், , பிச்சாவரம் சுற்றுலா போன்றவை மட்டுமே முக்கியத்துவம் பெறுகின்றன.
ஆனால், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கடல்சார் உயிரியல் ஆய்வு மையம் போன்ற முக்கியமான கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ள பரங்கிப்பேட்டை, அரசியல் மற்றும் ஊடக கவனத்தில் பெரும்பாலும் இடம் பெறாதது கேள்விக்குறியாகியுள்ளது.
நீண்டகால கோரிக்கைகள் – நிறைவேறாத வாக்குறுதிகள்:
பரங்கிப்பேட்டை மக்களின் அடிப்படை மற்றும் வளர்ச்சி சார்ந்த கோரிக்கைகள் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளன. அவற்றில் முக்கியமானவை:
– மீன்பிடித் துறைமுகம் அமைத்தல்: ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
– வரலாற்று நகர அந்தஸ்து: முகலாயர், போர்ச்சுகீசியர், டச்சு வணிகத் தடயங்களைக் கொண்ட நகரமாக இருந்தும், சுற்றுலா வளர்ச்சி திட்டங்களில் பரங்கிப்பேட்டை பின்தள்ளப்பட்டுள்ளது.
– அடிப்படை உள்கட்டமைப்பு: ரயில்வே மேம்பாலம், சாலை மேம்பாடு உள்ளிட்ட முக்கிய தேவைகள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளன.
இந்த கோரிக்கைகள் தேர்தல் அறிக்கைகளில் இடம் பெறுகின்றன என்றாலும், நடைமுறை நடவடிக்கைகளில் அது பிரதிபலிக்கவில்லை என்பது மக்கள் குற்றச்சாட்டு.
ஊடக கவனத்தில் சமநிலை இல்லை:
செய்தி ஊடகங்களின் தொகுதி தொடர்பான செய்திகளும் பெரும்பாலும் சிதம்பரத்தை மையமாகக் கொண்டே அமைகின்றன. வேட்பாளர்களின் பிரச்சாரங்கள், நேர்காணல்கள், தொகுதி ஆய்வுகள் ஆகியவை சிதம்பரத்திலேயே நிறைவடைகின்றன.
இந்தியாவின் ஆரம்ப கால தொழில்துறை வரலாற்றில் முக்கிய இடம் பெற்ற பரங்கிப்பேட்டை, தற்போதைய வளர்ச்சி விவாதங்களில் இடம் பெறாதது கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது.
மக்களின் குரல்:
பரங்கிப்பேட்டை மக்களின் ஒருமித்த கருத்து:
“தேர்தல் நேரத்தில் மட்டும் எங்களை நாடுகின்றனர். ஆனால், நமது பிரச்சினைகள் பேசப்படும் போது நாங்கள் தொகுதியின் ஓரமாக தள்ளப்படுகிறோம்” என்பதே.
சமநிலை வளர்ச்சி அவசியம்:
சிதம்பரம் தொகுதி என்பது ஒரு நகரத்தின் பெயர் மட்டுமல்ல; அது பல்வேறு வரலாற்று, சமூக மற்றும் பொருளாதார அடையாளங்களை கொண்ட பகுதிகளின் கூட்டுத்தொகை.
அதில் பரங்கிப்பேட்டை போன்ற பகுதிகள் உரிய முக்கியத்துவம் பெறாமல் இருந்தால், முழுமையான வளர்ச்சி சாத்தியமில்லை என்று சமூக அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
“சிதம்பரம் தொகுதியின் இதயம் சிதம்பரமெனில், அதன் ஆன்மா பரங்கிப்பேட்டை” என்ற வாசகம் தற்போது ஒரு உணர்வாக மட்டுமல்ல, அரசியல் மற்றும் நிர்வாக அமைப்புகளுக்கான எச்சரிக்கையாகவும் மாறியுள்ளது.
தமிழ்நாடு டுடே சிறப்பு செய்தி