Wed. Mar 25th, 2026

வேலூர், மார்ச் 23:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பத்தலபல்லி பகுதியில், தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, கர்நாடகா பதிவு எண் கொண்ட காரை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், டூம்கூர் பகுதியைச் சேர்ந்த சென்னா கவுடா என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி சுமார் ₹6 லட்சம் பணத்தை எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், காஞ்சிபுரத்தில் பட்டு சேலைகள் வாங்குவதற்காக பணம் எடுத்துச் சென்றதாக அவர் தெரிவித்தார். எனினும், அதற்கான ஆவணங்கள் இல்லாததால், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் பின்னர் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தனலட்சுமி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சோதனையில் வேளாண்மை உதவி அலுவலர் திவ்யஸ்ரீ, தலைமைக் காவலர் காந்தியரசன், பெண் காவலர் ரஷ்ய பானு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்


By TN NEWS