வேலூர், மார்ச் 23:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கல்லபாடி கிராமத்தில், இருசக்கர வாகனம் திருட முயன்ற இரண்டு பேரை பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்தார். அப்போது அங்கு வந்த இரு வாலிபர்கள் வாகனத்தை திருட முயன்றனர். இதை கவனித்த கிராம மக்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இருவரையும் சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர், பிடிக்கப்பட்ட இருவரையும் பரதராமி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பரதராமி காவல் ஆய்வாளர் ராபின்சன், உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், குடியாத்தம் அருகே தாட்டிமாணபல்லி மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த பாண்டு என்பவரின் மகன் காந்தி (25), ஆம்பூர் பாங்கி தெருவைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகன் விக்னேஷ் (19) என தெரியவந்தது.
இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்