Mon. Mar 23rd, 2026

அமைச்சர் ஐ. பெரியசாமி திறந்து வைத்தார் – உடற்பயிற்சி அரங்கமும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு.

திண்டுக்கல் நகரில் கோபால சமுத்திர கரையில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் கோபால்நாயக்கர் நினைவாக உருவாக்கப்பட்ட வாழ்க்கை வரலாற்று கல்வெட்டை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் நடை பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள திறந்த வெளி உடற்பயிற்சி அரங்கத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, மாநகராட்சி ஆணையாளர் செந்தில்முருகன், மாநகர திமுக பொருளாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ராமர், திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்

By TN NEWS