Mon. Mar 16th, 2026

குடியாத்தம், மார்ச் 14

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பழைய பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமை மற்றும் உரையாற்றியவர்கள்:

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குடியாத்தம் (மே) ஒன்றிய செயலாளர் தோழர் கே.சி. பிரேம்குமார் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்வில்,

ஆலியார் அத்தாவுல்லா – நகர செயலாளர்

ஜி. தங்கவேலு – AITUC

நா. பரமசிவம் – வி.தொ.ச.ஒ. செயலாளர்

உ. வேலு – அணைக்கட்டு ஒன்றிய துணை செயலாளர்

பி.ஆர். பிரகாசம் – ஒன்றிய துணை செயலாளர்

ஆகியோர் கலந்து கொண்டு சமையல் எரிவாயு விலை உயர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து கண்டனம் தெரிவித்து உரையாற்றினர்.

கலந்து கொண்டவர்கள்

இந்த ஆர்ப்பாட்டத்தில்
கு. வினாயகம், ஜி. முனிசாமி, டி. மணியரசன், வி. சற்குணம், வி. மலர்கொடி, பி.ஆர். ராஜராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி

நிகழ்ச்சியின் முடிவில் தோழர் சி. கருணாநிதி (AITUC) நன்றி கூறினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS