சின்னமனூர், மார்ச் 5:
தேனி மாவட்டம் மேகமலை பகுதி மக்களின் வாழ்வாதார உரிமைகளை பறிக்கும் வகையில் வனத்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை கண்டித்து, சின்னமனூர் ரவுண்டானா பகுதியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் மேகமலை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு வனத்துறைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகள்:
ஜமீன்தார் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் முதல் பட்டா நிலங்களில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக வனத்துறை விதித்து வரும் தடையை உடனடியாக நீக்க வேண்டும்.
100 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டா விவசாயிகள் பயன்படுத்தி வந்த அப்பர் மணலார் – வெள்ளிமலை சாலையில் வனத்துறை விதித்துள்ள தடையை நீக்க வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான 48.4 கி.மீ நீளமுள்ள சாலையில் வனத்துறை தன்னிச்சையாக ஆக்கிரமிப்பு செய்து போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை மேகமலை மக்களின் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்.
சோதனைச் சாவடிகளில் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களை நீண்ட நேரம் காத்திருக்க வைப்பதை நிறுத்த வேண்டும்.
இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட வீடுகள், மேற்கூரைகள் மற்றும் கழிப்பிடங்களை பழுதுபார்க்க தேவையான கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்ல அனுமதி வழங்க வேண்டும்.
அடுத்தகட்ட நடவடிக்கை அறிவிப்பு:
அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் பலமுறை புகார் அளித்தும் தீர்வு கிடைக்காததால், போராட்டக்காரர்கள் தங்களது ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.
மேலும், கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படாவிட்டால் வரவுள்ள 2026 சட்டசபைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக மேகமலை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் மேகமலை விவசாயிகள் சங்கம், எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கம், HMS, LPF (திமுக), ATP (அதிமுக), INTUC ஐராவேலிஸ் குழு மற்றும் 7 மலை கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு:
அன்புபிரகாஷ் முருகேசன்
தேனி மாவட்ட தலைமை செய்தியாளர்