Fri. Mar 6th, 2026

செஞ்சி, மார்ச் 4:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். மஸ்தான், செஞ்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் வளத்தி பகுதியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு எடை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு பரிசோதனை மேற்கொள்ளப்படுவதை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பள்ளி மாணவிகளுக்கு இரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்படுவதையும் அவர் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட சுகாதார அலுவலர் மரு. சா. செந்தில்குமார், மேல்மலையனூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

விழுப்புரம் மாவட்ட முதன்மை செய்தியாளர்:
தமிழ். மதியழகன்
கிரைம் செய்தியாளர்:
சக்திவேல் விஜயன்




By TN NEWS