பிப்ரவரி 28:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லூர் புதிய மேம்பாலம் செல்லும் சாலை வளைவில் ஏற்பட்ட சாலை விபத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
கல்லூரைச் சேர்ந்த ஜெயக்கொடி மகன் பாலிடெக்னிக் படித்து வந்தார். சம்பவத்தன்று அவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மேம்பாலத்தின் கீழிருந்து வளைந்து செல்ல முற்பட்டபோது, அதிவேகமாக வந்த கார் ஒன்று அவரது இருசக்கர வாகனத்தை மோதியதாக கூறப்படுகிறது.
விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த மாணவர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மாணவரை மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற கார் மற்றும் அதில் பயணித்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த விபத்துக்கு முக்கிய காரணமாக, அந்த பகுதியில் போதிய வெளிச்ச வசதி இல்லாதது தான் காரணம் என பொதுமக்கள் மற்றும் உள்ளூர் வாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்