Sun. Mar 1st, 2026

திண்டுக்கல், செய்தியாளர் ராமர்:

2021 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தலைமையிலான கூட்டணியில் 13 கட்சிகள் இடம்பெற்றிருந்தன.

அதே கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்வதோடு, புதிதாக மேலும் 6 கட்சிகள் இணைந்துள்ளதால், திமுக கூட்டணியின் மொத்த கட்சிகள் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக இணைந்துள்ள கட்சிகள்:
மக்கள் நீதி மய்யம்,
தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக),
எஸ்டிபிஐ,
மனிதநேய ஜனநாயகக் கட்சி,
முக்குலத்தோர் புலிப்படை,
கொங்கு இளைஞர் பேரவை ஆகியவை.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள 19 கட்சிகள்:

1. திராவிட முன்னேற்றக் கழகம்


2. இந்திய தேசிய காங்கிரஸ்


3. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்


4. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி


5. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)


6. விடுதலை சிறுத்தைகள் கட்சி


7. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்


8. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி


9. மனிதநேய மக்கள் கட்சி


10. அகில இந்திய பார்வர்டு பிளாக்


11. தமிழக வாழ்வுரிமை கட்சி


12. மக்கள் விடுதலை கட்சி


13. ஆதிதமிழர் பேரவை


14. மக்கள் நீதி மய்யம்


15. தேசிய முற்போக்கு திராவிட கழகம்


16. எஸ்டிபிஐ


17. மனிதநேய ஜனநாயகக் கட்சி


18. முக்குலத்தோர் புலிப்படை


19. கொங்கு இளைஞர் பேரவை



இதனால், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான கூட்டணி வலுவான அரசியல் அமைப்பாக உருவெடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

By TN NEWS