Fri. Feb 27th, 2026

செஞ்சி, பிப். 26:
தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கு அடுத்த மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி விழுப்புரம் மாவட்டத்தில் பணியிட மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, ஷேக் அப்துல் ரஹ்மான், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், மாவட்டத்திலுள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் பணியாற்றி வந்த அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நில எடுப்பு தனி வட்டாட்சியராக பணியாற்றி வந்த கார்த்திகேயன், செஞ்சி வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, அவர் நேற்று செஞ்சி வட்டாட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிய வட்டாட்சியராக பொறுப்பேற்ற கார்த்திகேயனுக்கு வருவாய்த் துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர்கள் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தனர்.

ஒளிப்பதிவு: கே. மாரி, விழுப்புரம் மாவட்டம்.

By TN NEWS