Fri. Feb 27th, 2026

செஞ்சி, பிப். 26:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மூத்த முன்னோடியும், முதன்மை செயலாளருமான ஏ.சி. பாவரசு அவர்கள் இன்று இயற்கை எய்தினார். அவரது மறைவு கட்சியினரிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நான்கு முனைச் சந்திப்பு அருகே கட்சியின் சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. செஞ்சி சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் செஞ்சி சிவா தலைமையில், ஏ.சி. பாவரசு அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் மண்டல செயலாளர் வழக்கறிஞர் நன்மாறன், மண்டல துணை செயலாளர் தனஞ்செழியன், மாவட்ட பொருளாளர் அரசு, மாவட்ட செய்தித் தொடர்பாளர் தவசீலன், மாவட்ட துணை செயலாளர்கள் ராசாராமன், சாத்தபுத்தூர் சங்கர், மா.க. வெங்கடேசன், ஜெயக்குமார், துரைவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தலித் மகிழ்வரசு, அம்பேத்சிவக்குமார், சாலமலன், மகளிர் விடுதலை இயக்க மாவட்ட செயலாளர் அருள்மொழி, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட செயலாளர் ஜெயராஜ், நகர பொருளாளர் வழக்கறிஞர் காமராஜ், ஒன்றிய செயலாளர் திருநாவுகரசு, மாநில துணை செயலாளர் இனியவளவன், மாவட்ட துணை அமைப்பாளர் பரசுராமன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல், ஒன்றிய பொருளாளர் பார்வேந்தன், ஒன்றிய துணை செயலாளர்கள் சுரேஷ், கோவிந்தன், சங்கர், இராமச்சந்திரன், ஆசிரியர் ரவி, அர்ச்சுனன், நாகசாமி, சரவணன், நகர துணை செயலாளர்கள் செந்தில், பாபுஜி, தமிழ்ச்செல்வன், முருகன், பிரபாகரன், தேவேந்திரன், நாகராஜ், மனோகர் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர்.

ஏ.சி. பாவரசு அவர்களின் மறைவு கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஒளிப்பதிவு: கே. மாரி, விழுப்புரம் மாவட்டம்.

By TN NEWS