⁸விழுப்புரம் மாவட்டம், செஞ்சி – திண்டிவனம் சாலையில் அமைந்துள்ள சக்கராபுரம் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் மூலவர் செல்வ விநாயகர், வீர விநாயகர், பாலமுருகன், ஐயப்பன், அரச மரத்தடி விநாயகர் மற்றும் நவகிரக சுவாமிகளுக்கு மஹா கும்பாபிஷேகம் விழா சிறப்பாக நடைபெற்றது.
✨ விழா முன்னேற்பாடுகள்
பிப்.6 (வெள்ளிக்கிழமை): யாகசாலை அமைப்பு, புனித நீர் கலசங்கள் நிறுவல், கணபதி ஹோமம், யாகசாலை பிரவேசம், அங்குறாற்பணம், முதல் கால யாகசாலை பூஜை.
பிப்.7 (சனிக்கிழமை): இரவு நவகிரக பூஜை, தீக்ஷா ஹோமம், இரண்டாம் கால யாகசாலை பூஜைகள்.
🕉️ மஹா கும்பாபிஷேகம்
பிப்.08/2026 (ஞாயிற்றுக்கிழமை): காலை கணபதி பூஜை, மூல மந்திர ஹோமம், பூர்ணாஹூதி, மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலசங்கள் மங்கள மேள வாத்தியங்களுடன் ஆலய விமானத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.
கோபுர கலசங்களுக்கு பூஜைகள் செய்து, பக்தர்களின் “அரோகரா… அரோகரா…” என்ற கரகோஷத்துடன் கோபுர கலசத்திற்கும், மூலவர் செல்வ விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது.
அதன் பின் மகா தீப ஆராதனை நடைபெற்றது. புனித நீர் கூடியிருந்த பக்தர்களின் மீது தெளிக்கப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் விமர்சையாக நிறைவேற்றப்பட்டது.
🍛 அன்னதானம்
விழாவைத் தொடர்ந்து, பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
🙏 பங்கேற்பு
நிகழ்ச்சியில் மேல் ஒலக்கூர் ஸ்ரீ லலிதானந்தா ஆசிரமத்தின் ராமானந்தா சரஸ்வதி சுவாமிகள், செஞ்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட முதன்மை செய்தியாளர்:
தமிழ். மதியழகன்