Thu. Feb 5th, 2026

தேனி:
தேனி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு துணை மின் நிலையங்களில், பிப்ரவரி 2026-ஆம் மாதத்திற்கான மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, சீரான மற்றும் பாதுகாப்பான மின் விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கில், குறிப்பிட்ட பகுதிகளில் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தற்காலிகமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் என தேனி மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தேதி வாரியாக மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்.

பிப்ரவரி 04: சின்ன ஓவுலாபுரம்

பிப்ரவரி 05: போடி
(நீதிமன்றத்திற்கு மாற்று மின் வசதி செய்யப்படும்)

பிப்ரவரி 07: வந்நதிப்பாறை

பிப்ரவரி 12: வீரபாண்டி

பிப்ரவரி 17: க.விலக்கு (அரசு மருத்துவமனைக்கு மாற்று மின் வசதி), தேவாரம்

பிப்ரவரி 18: தேனி

பிப்ரவரி 19: கம்பம் மற்றும்
ஆண்டிபட்டி
(ஆண்டிபட்டி நீதிமன்றத்திற்கு மாற்று மின் வசதி)

பிப்ரவரி 21: மதுராபுரி (மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்று மின் வசதி) மற்றும்
உத்தமபாளையம் (நீதிமன்றத்திற்கு மாற்று மின் வசதி)

பிப்ரவரி 23: கடமலைக்குண்டு, காமாட்சிபுரம்

பிப்ரவரி 24: அரண்மனைப்புதூர் (மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்று மின் வசதி) மற்றும் வைகை அணை

பிப்ரவரி 26: பெரியகுளம்
(அரசு மருத்துவமனை மற்றும் நீதிமன்றத்திற்கு மாற்று மின் வசதி)

பிப்ரவரி 27: கண்டமனூர்

முக்கிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.

மருத்துவமனை & நீதிமன்றங்கள்:
பொதுமக்களின் நலன் கருதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் ஆகிய முக்கிய அரசு அலுவலகங்களுக்கு, Back Feeding முறையில் மாற்று மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் கவனத்திற்கு:
மின்நிறுத்தம் செய்யப்படும் நாட்களில் பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகள் (Practical Exams) நடைபெற இருப்பின், அந்தந்த பள்ளிகள் UPS உள்ளிட்ட தடையற்ற மின்சார வசதிகளை முறையாக பராமரித்து வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு வேண்டுகோள்.

இந்த பராமரிப்புப் பணிகளுக்காக பொதுமக்கள் மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு மின்சார வாரியம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


செய்தி தொகுப்பு :
அன்புபிரகாஷ் முருகேசன்
தேனி மாவட்ட தலைமை செய்தியாளர்

By TN NEWS