வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில், பிப்ரவரி 4ஆம் தேதி பாலின உளவியல் குறித்து கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழு சார்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவிகளிடையே பாதுகாப்பு, மனநலம் மற்றும் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
முதல்வர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ. எபநேசர் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், பாலின உளவியல் தொடர்பான சிக்கல்கள் உருவாகும் முன்னரே அவற்றைத் தடுக்க பெற்றோர் வழிகாட்டுதல், பேராசிரியர்களின் ஆலோசனை மற்றும் கல்லூரியில் இயங்கி வரும் உள் புகார்கள் குழு (Internal Complaints Committee) பற்றிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
காவல்துறை உதவி எண்கள் குறித்து விளக்கம்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காவல் ஆய்வாளர் ரூக்மாங்கதன் பேசுகையில், மாணவிகள் எப்போதும் விழிப்புடன் இருந்து காவல்துறையின் உதவி எண்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும், காவல்துறை செயலியை பயன்படுத்தும் முறைகள் குறித்தும் விரிவாக விளக்கினார்.
போக்ஸோ, குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு.
உதவி காவல் ஆய்வாளர் தரணி பருவதம் பேசுகையில், குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் மற்றும் போக்ஸோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வை மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார். சட்டங்களை அறிந்து பாதுகாப்பாக செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவலர் பானு, கணிதத்துறை தலைவர் முனைவர் செ. கருணாநிதி, இயற்பியல் துறை தலைவர் முனைவர் அ. தாமரை, கணிதத்துறை இணை பேராசிரியர் முனைவர் ந. கெஜலட்சுமி உள்ளிட்ட பேராசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.
செய்தி :
குடியாத்தம் தாலுக்கா
கே.வி. ராஜேந்திரன்
(தாலுக்கா செய்தியாளர்)