Sun. Mar 22nd, 2026

குடியாத்தம் | ஜன.31

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பெரும்பாடி கிராமத்தில், கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமை கால்நடை மருத்துவர் திருமுருகன் தலைமையிலான மருத்துவ குழுவினர் தொடங்கி வைத்தனர்.

முகாமில் உரையாற்றிய மருத்துவர் திருமுருகன்,
“கால்நடைகளை தாக்கும் கோமாரி நோயால் பால் உற்பத்தி கடுமையாகக் குறைகிறது. இதனால் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க தகுதியுள்ள அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி செலுத்துவது அவசியம்,” என வலியுறுத்தினார்.

இந்த முகாமில் கலவை ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் து. சஞ்சனா, ச. சந்தியா, பா. ஷாமிலி, மா. ஷர்மிளா, வெ. ஸ்ரீலோக, மு. சுபஸ்ரீ உள்ளிட்டோர் மருத்துவ குழுவினருடன் இணைந்து தடுப்பூசி செலுத்தும் பணிகளில் துணைநின்றனர்.

முகாமின் மூலம் பெரும்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான பசுக்கள் மற்றும் எருமைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இம்முகாம் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS