Sun. Jan 11th, 2026

RAHEL அறக்கட்டளை – REHLS சொசைட்டி முன்னெடுப்பு.

விழுப்புரம் மாவட்டம் | விக்கிரவாண்டி

விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வரும் RAHEL அறக்கட்டளை மற்றும் REHLS சொசைட்டி இணைந்து செயல்படுத்தும் 2 லட்சம் பனை விதைகள் நடும் திட்டத்தின் துவக்க விழா, வியாழக்கிழமை (ஜனவரி 8) விக்கிரவாண்டி தாலுகா, ஒரத்தூர் கிராமத்தில் உள்ள முள்ளங்கி ஏரிக்கரையில் சிறப்பாக நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன்,ஒரத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் எல்.பி.எஸ். லதா பிரபு,ஒன்றிய கவுன்சிலர் டி. நளினி ஜெயச்சந்திரன்,
ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கே. சுனிதா கண்ணதாசன்
ஆகியோர் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

முதல் நாளிலேயே 1000-க்கும் மேற்பட்ட பனை விதைகள்.

திட்டத்தின் துவக்க நாளிலேயே, முள்ளங்கி ஏரிக்கரையின் முழு பரப்பளவிலும் 1000-க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டன.சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர்வள மேம்பாடு மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்படும் இந்த திட்டம், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

அமைப்பாளர்கள் – பொதுமக்கள் பங்கேற்பு.

இந்நிகழ்வில்,RAHEL அறக்கட்டளையின்,சேர்மன் பிராஸ்பர் பக்த டைடஸ்,செயலாளர் சுரேஷ்குமார்,ஆலோசகர் இமாம் காசிம்,பொருளாளர் சந்திரசேகர்,செய்தித் தொடர்பாளர் மனாசே ராஜ்,செயற்குழு உறுப்பினர் வி. தீனு,
விக்கிரவாண்டி ஒன்றிய மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் டி. மகுடமணி,REHLS சொசைட்டியின் பொருளாளர் காஜலரிதா,
பொதுச் செயலாளர் சுப்பரமணியன்,கமலவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

கிராம மக்களின் உற்சாக பங்கேற்பு

இந்த நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பனை விதைகள் நட்டதில் பங்கேற்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான தங்களின் ஆதரவை மக்கள் உற்சாகமாக வெளிப்படுத்தினர்.

நீண்டகால சுற்றுச்சூழல் பலன்

இந்த 2 லட்சம் பனை விதைகள் நடும் திட்டம்,
➡️ இயற்கை வளங்களை பாதுகாக்கவும்,
➡️ நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும்,
➡️ கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரியவும்
முக்கிய பங்காற்றும் என அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.


விழுப்புரம் மாவட்ட முதன்மை செய்தியாளர் :

தமிழ். மதியழகன்




By TN NEWS