Sat. Jan 10th, 2026

பாப்பிரெட்டிபட்டி மேற்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் பி.எஸ். சரவணன் துவக்கம்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு, இலவச வேட்டி மற்றும் சேலை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை துவக்கி வருகின்றனர்.

அதன்படி, பாப்பிரெட்டிபட்டி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பையர்நத்தம் மற்றும் பி.பள்ளிப்பட்டி பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரொக்கம் மற்றும் இலவச வேட்டி–சேலை வழங்கும் பணியை ஒன்றிய செயலாளர் பி.எஸ். சரவணன் தொடங்கி வைத்தார்.

பொங்கல் பரிசுத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

தமிழகம் முழுவதும் 2 கோடிக்கும் மேற்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்கள்

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள்

ஒவ்வொரு குடும்பத்திற்கும்:

1 கிலோ பச்சரிசி

1 கிலோ சர்க்கரை

ஒரு முழுநீள கரும்பு

ரொக்கப் பரிசு: ரூ.3,000

மேலும்,

1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் சேலைகள்

1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் வேட்டிகள்
வழங்கப்பட உள்ளன.

இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரொக்கப் பரிசு மற்றும் வேட்டி–சேலை வழங்கும் திட்டம் மொத்தம் ரூ.7,604.29 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது.
பொங்கல் பண்டிகைக்கு முன்பாக, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசுத் தொகுப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்:

இந்த நிகழ்ச்சியில்,

கிராம நிர்வாக அலுவலர் இளங்கோ

முன்னாள் ஊராட்சி தலைவர் சாந்தா குப்புசாமி

கவுன்சிலர் கண்ணன்

கிளைக்கழக செயலாளர்கள் சங்கர், வா.விஜயன், பூக்கடை வெங்கடேசன்

ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் கார்த்திக்

ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தினேஷ்

சார்பு அணி நிர்வாகிகள் சி.கண்ணன், ராஜா (எ) வெங்கடாசலம், சி.செல்வம், செந்தூரன், உதயசூரியன், ச.இளமாறன், தீனதயாளன், கதிரி பழனி, ரகுநாதன்

கிளைக்கழக நிர்வாகிகள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

மண்டல செய்தியாளர்:
ராஜீவ் காந்தி

By TN NEWS