தென்காசி மாவட்டம்:
கட்டுமான முறைசாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு பரிசுப் பொருட்களுடன் ரூ.15,000 பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக அரசு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், AICCTU ஜனநாயக கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாநிலத்தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில், இந்த ஆர்ப்பாட்டம் தென்காசி தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு,
AICCTU தென்காசி மாவட்ட ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் M.அழகையா தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தை AICCTU தென்காசி மாவட்ட ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட கௌரவத் தலைவர் R.முருகையா துவக்கி வைத்து உரையாற்றினார்.
நிறைவாக, AICCTU தென்காசி மாவட்ட பொதுச் செயலாளர் M.வேல்முருகன் உரையாற்றி போராட்டத்தை முடித்து வைத்தார்.
மேலும்,
V.குமார் (மாவட்ட துணைத் தலைவர்) கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில்,
CPI (ML) கட்சி தென்காசி மாவட்ட குழு உறுப்பினர்கள்
M.வேலு, P.முத்துலட்சுமி, M.ராமர்பாண்டியன், L.பரமசிவன், S.அண்ணாதுரை,
M.ஆறுமுகராஜ், M.பாலசுப்பிரமணியன்,
AIKM விவசாய சங்க பொறுப்பாளர் சரவண விநாயகம்,
CPI (ML) கட்சி கிளைச் செயலாளர்கள் பீட்டர், அந்தோணி, ஆறுமுகசாமி, வேலாயுதம்,
AICCTU தென்காசி மாவட்ட நிர்வாகிகள்
P.வில்சன், M.மாரியப்பன், P.பொன்செல்வன், M.வெங்கடாசலமூர்த்தி,
A.ரஹிமாள், M.மாடசாமி, M.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் 17 பெண் தொழிலாளிகள் உட்பட 105-க்கும் மேற்பட்ட AICCTU கட்டுமான முறைசாரா தொழிலாளர்கள் பங்கேற்று,
“பொங்கல் போனஸ் வழங்கு”, “நலவாரிய நிதியை தொழிலாளர்களுக்கு பயன்படுத்து” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.
கோரிக்கை மனுக்கள்:
போராட்டத்திற்குப் பின்னர்,
AICCTU ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள்,
தென்காசி தொழிலாளர் நல வாரிய உதவி ஆணையாளர் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கி பேசினர்.
அதேபோல், தென்காசி மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு
கட்டுமான தொழிலாளர்களின் பொங்கல் போனஸ் கோரிக்கை மனு உடனடியாக தபால் மூலம் அனுப்பப்பட்டது.
முக்கிய கோரிக்கைகள்:
பக்கத்து மாநிலங்களைப் போல்,
கட்டுமான முறைசாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு பரிசுப் பொருட்களுடன் ரூ.15,000 பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்.
கட்டுமான மற்றும் முறைசாரா தொழிலாளர் நல வாரியங்களில் இருப்பிலுள்ள
ரூ.6,000 கோடிக்கும் மேற்பட்ட நிதியை தொழிலாளர்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்.
கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, இயற்கை மரண உதவித் தொகை உள்ளிட்ட அனைத்து நலவாரியப் பணப் பயன்களையும் உடனடியாக வழங்க வேண்டும்.
விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, குறைந்தபட்ச பென்ஷனாக மாதம் ரூ.6,000 வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, கட்டுமான முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பாதுகாப்புக்காக இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அமல்ராஜ்
தலைமை செய்தியாளர்
தென்காசி மாவட்டம்

