Sat. Jan 10th, 2026

விழுப்புரம் மாவட்டம் | ஜனவரி 1

செஞ்சி அருகே சத்தியமங்கலம் புறவழி சாலை பகுதியில், ஆங்கில புத்தாண்டு தினத்தன்று ஒரே நாளில், ஒரே இடத்தில் நடைபெற்ற இரண்டு சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்த சம்பவம், தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நிர்வாக பொறுப்புகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.

National Highways Act – சட்டக் கோணம்:

National Highways Act, 1956 மற்றும் அதனுடன் தொடர்புடைய மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி,

தேசிய நெடுஞ்சாலைகள் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பராமரிக்கப்பட வேண்டும்

போதிய மின்விளக்குகள், சாலை குறியீடுகள், எச்சரிக்கை பலகைகள் கட்டாயம்

விபத்து அபாயம் அதிகமான பகுதிகளில் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்

என விதிமுறைகள் கூறுகின்றன. ஆனால் சத்தியமங்கலம் புறவழி சாலை பகுதியில், இவ்விதிகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Road Safety Audit – ஏன் அவசியம்?

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) வகுத்துள்ள Road Safety Audit (RSA) வழிகாட்டுதல்களின்படி,

அடிக்கடி விபத்துகள் நடைபெறும் பகுதிகள் “Black Spot” என அடையாளம் காணப்பட வேண்டும்

சாலையின் வடிவமைப்பு, விளக்குகள், வளைவுகள், பள்ளங்கள், வேக கட்டுப்பாடு
ஆகியவை தொழில்நுட்ப ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்

Audit அறிக்கையின் அடிப்படையில் உடனடி மற்றும் நிரந்தர தீர்வுகள் வழங்கப்பட வேண்டும்

ஒரே நாளில் இரண்டு உயிரிழப்புகள் நடந்த இடத்தில், Road Safety Audit மேற்கொள்ளாதது அலட்சியமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொறுப்புணர்வு கேள்வி:

NH Act மற்றும் MoRTH பாதுகாப்பு நெறிமுறைகளின்படி,

Road Safety Audit மேற்கொள்ளத் தவறினால்,

விபத்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால்,

சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை / ஒப்பந்த நிறுவனம் / பராமரிப்பு அமைப்புகள் மீது பொறுப்பு ஏற்படும் நிலை உருவாகிறது.

பொதுமக்கள் கோரிக்கை:

அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்,

சத்தியமங்கலம் புறவழி சாலையை Accident-Prone Zone / Black Spot என அறிவிக்க

உடனடியாக Road Safety Audit நடத்த

உயர்மின் விளக்குகள், எச்சரிக்கை பலகைகள், வேக கட்டுப்பாட்டு அமைப்புகள் நிறுவ வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

ஒரே நாளில் இரண்டு உயிர்கள் இழந்த பிறகும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், அது விபத்து அல்ல – நிர்வாக அலட்சியத்தின் விளைவு என்றே கருதப்படும் என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.


விழுப்புரம் மாவட்ட முதன்மை செய்தியாளர் :
தமிழ். மதியழகன்
ஒளிப்பதிவாளர் : மாரி

By TN NEWS