Sat. Jan 10th, 2026

29.12.25
சென்னை வள்ளுவர் கோட்டம்

புதிய சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்கள் இந்தியாவின் நிதி நம்பிக்கையையும் பொருளாதார வளர்ச்சியையும் காக்கும் அடுத்த தலைமுறை காவலர்கள்.

பாராளுமன்றச்சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள ICAI நடத்தும் இந்த பட்டமளிப்பு விழாவில், ICAI-யின் தலைவர் சரணோட் சிங் நந்தா, துணைத் தலைவர் பிரசன்னா குமார் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், இந்திய அரசின் மத்திய அரசின் மூத்த நிர்வாக அதிகாரியான விவேக் பரத்வாஜ் IAS இந்நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினராக பங்கேற்று, புதிதாக தகுதி பெற்ற சார்ட்டர்டு அக்கவுண்டண்ட்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் சுமார் 1300 புதிய Chartered Accountants பட்டம் பெற்று உள்ளார்.இது அவர்களின் கல்வி மற்றும் தொழில்முறை பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். புதிய CAக்கள், நாட்டின் நிதி ஒழுங்குமுறை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியை பாதுகாக்கும் முக்கியப் பொறுப்பை ஏற்க உள்ளதாக ICAI தெரிவித்துள்ளது.

இந்த விழா புதிய சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்கள் இந்தியாவின் நிதி நம்பிக்கையையும்
பொருளாதார வளர்ச்சியையும் காக்கும் அடுத்த தலைமுறை காவலர்கள் என்ற கருத்தை வலியுறுத்தும் பெருமைமிகு நிகழ்வாக  எனவும் மேலும் நிதி நம்பிக்கையின் பாதுகாவலர்கள் இந்திய வளர்ச்சியின் இயக்க சக்தி என்ற வாசகமும் இந்த பட்டமளிப்பு விழாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.


1)பட்டமளிப்பு விழாவில் புதிய சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் ஆக பட்டம் சஞ்சனா வெங்கட கிருஷ்ணன் பேட்டி.

சென்னையில் நடைபெற்ற இந்திய சார்ட்டர்டு அக்கவுண்டண்ட்ஸ் நிறுவனம் (ICAI) சார்பான பட்டமளிப்பு விழாவில், புதிய சார்ட்டர்டு அக்கவுண்டண்டாக பட்டம் பெற்ற சஞ்சனா வெங்கட கிருஷ்ணன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறியதாவது, “என்னுடைய பெயர் சஞ்சனா வெங்கட கிருஷ்ணன். இன்று முதல் நான் CA சஞ்சனா வெங்கட கிருஷ்ணன் என பெருமையுடன் அழைக்கப்படுகிறேன். இந்தப் படிப்பை மிகவும் கடினமாக உழைத்து முடித்துள்ளேன். இந்த பட்டம் எனக்கு மட்டும் அல்லாமல், என்னை பெற்றெடுத்த என் பெற்றோருக்கும் மிகுந்த பெருமையை அளிக்கிறது” என்றார்.

மேலும், “இந்தியாவில் பலர் சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் படிப்பை தேர்வு செய்கிறார்கள். ஆனால், அதனை முழுமையாக முடிப்பவர்கள் மிகக் குறைவே. அதற்கு முக்கிய காரணம் தொடர்ந்து உழைக்கும் மனப்பாங்கும் தன்னம்பிக்கையும் தான். இந்த முறையில் அதிகமான பெண்கள் தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.

25 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்கள் இந்தப் படிப்பை பயில வேண்டும் என அவர் வலியுறுத்தினார். “வருங்காலத்தில் இந்தியாவிற்கு அதிகமான சார்ட்டர்டு அக்கவுண்டண்ட்கள் தேவைப்படும். இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நாம் முக்கிய பங்காற்ற முடியும். பண்டிகை நாட்களிலும் கூட படிப்பை தொடர்ந்தோம். மேலும், இந்தப் படிப்பை பயில்வதற்கு அதிக செலவு தேவையில்லை” என சஞ்சனா வெங்கட கிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழ்நாடு டுடே சென்னை செய்தியாளர் எம். யாசர் அலி

By TN NEWS