Sat. Jan 10th, 2026

கள்ளக்குறிச்சி, டிசம்பர் 27

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி,
நான்கு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் – 4,
இருசக்கர வாகனங்கள் – 29
என மொத்தம் 33 வாகனங்கள்,
வரும் 29ம் தேதி காலை 10.00 மணிக்கு,
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது.

முன்வைப்பு தொகை விவரம்.

இருசக்கர வாகனங்களுக்கு – ரூ.1,000

நான்கு / மூன்று சக்கர வாகனங்களுக்கு – ரூ.2,000


முன்வைப்பு தொகை செலுத்துவோர் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.
மேலும், ஏல செலவினத்திற்காக ஒவ்வொருவரிடமும் ரூ.100 வசூலிக்கப்படும்.

வாகனங்களை பார்வையிடும் நேரம்:

ஏலம் விடப்படவுள்ள வாகனங்களை,
29ம் தேதி காலை 8.00 மணியிலிருந்து,
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் நேரில் பார்வையிடலாம்.

கட்டண விதிமுறைகள்.

ஏலம் எடுக்கப்படும் வாகனத்தின் முழுத் தொகை

அதனுடன் 18% ஜி.எஸ்.டி. வரி


ஆகியவை அன்றைய தினத்திலேயே முழுமையாக செலுத்தப்பட வேண்டும்.

ஏலத்தில் பங்கேற்கும் வாகனங்களின் முன்னாள் உரிமையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு தொடர்பு.

90424 17209

04151 – 220260


என்ற எண்களில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்.

V. ஜெய்சங்கர்
PRO – Tamilnadu Today

By TN NEWS