Sat. Jan 10th, 2026

இந்திய ரயில்வே வரலாற்றில் முதல் முறை – மெட்ரோ கட்டுப்பாட்டுக்குள் MRTS.

சென்னை | சிறப்பு செய்தி.

இந்தியாவின் நகர்ப்புற போக்குவரத்து வரலாற்றில் முன்னோடியில்லாத ஒரு முக்கியமான மாற்றம் சென்னையில் நிகழ இருக்கிறது.
சென்னை புறநகர் விரைவு ரயில் போக்குவரத்து அமைப்பான MRTS (Mass Rapid Transit System), முழுமையாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட உள்ளது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தீவிர முயற்சியின் பலனாக,
தெற்கு ரயில்வேக்கு சொந்தமான MRTS-இன் 100% சொத்துகள், செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு பொறுப்புகள் தமிழ்நாடு அரசுக்கும், CMRL-க்கும் மாற்றப்படுகின்றன.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும்,
அடுத்த சில நாட்களில் அல்லது ஜனவரி மாதத்தில் கையெழுத்தாகும் என்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மெட்ரோ – MRTS ஒருங்கிணைப்பு : என்ன மாற்றம்?

MRTS-இன் தண்டவாளங்கள், பாலங்கள், சிக்னல் அமைப்புகள், மின்மயமாக்கல் வசதிகள், நிலங்கள், கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்புகளும் CMRL-க்கு மாற்றப்படும்

இயக்கம், பராமரிப்பு, டிக்கெட் விற்பனை ஆகியவை ஒருங்கிணைந்த முறையில் செயல்படும்.

இரண்டு ஆண்டுகளுக்கான கட்டம் வாரியான கையகப்படுத்தல் மற்றும் சீரமைப்பு திட்டம் MoU-வில் இடம்பெறும்.
இந்த மாற்றம், இந்தியாவின் வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு ரயில்வே சேவை, மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் கீழ் வருவது என்பதால், துறை சார்ந்த நிபுணர்கள் இதை “வரலாற்றுச் சாதனை” என வர்ணிக்கின்றனர்.

₹600–700 கோடி ஒப்பந்தம் | முழு உரிமை மாநில அரசுக்கு

1995ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் MRTS திட்டத்தில்,

ஏற்கெனவே 67% பங்குகளை தமிழக அரசு வைத்துள்ளது

மீதமுள்ள 33% பங்குகளை இந்திய ரயில்வேயிடமிருந்து வாங்க CMRL தயாராகி வருகிறது.

இதற்காக ₹600 கோடி முதல் ₹700 கோடி வரை செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் MRTS நெட்வொர்க்கின் முழு உரிமையும் தமிழ்நாடு அரசிடம் வரும்.
புதிய ரயில்கள் | 2026 ஜனவரியில் சேவை தொடக்கம்?

டெல்லி மெட்ரோ தரத்தில் உருவாக்கப்பட்ட
25 குளிர்சாதன வசதி கொண்ட அகலப் பாதை ரயில்கள் சேவையில் சேர்க்கப்பட உள்ளன

வேளச்சேரி – செயின்ட் தாமஸ் மவுண்ட் வழித்தடத்தில்
2026 ஜனவரிக்குள் சேவை தொடங்கும் என எதிர்பார்ப்பு

25 கி.மீ நீளமுள்ள இந்த வழித்தடம்,
சென்னை கடற்கரை – புனித தோமையர் மலை வரை விரிவடைகிறது.

₹4,000 கோடி உலக வங்கி கடன் – முழுமையான மேம்பாடு:

MRTS சேவையை மெட்ரோ தரத்துக்கு உயர்த்த,
உலக வங்கியிடம் இருந்து ₹4,000 கோடி கடன் பெற தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த நிதி மூலம்:

₹1,000 கோடி மதிப்பிலான புதிய ரயில் பெட்டிகள்

சுமார் 20 நிலையங்கள் நவீனமயமாக்கல்

எஸ்கலேட்டர்கள், பயணிகள் வசதிகள்

500 மீட்டர் சுற்றளவில் சுற்றுப்புற உட்கட்டமைப்பு மேம்பாடு
Last-mile connectivity வலுப்படுத்தல்
என விரிவான சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
2027 டிசம்பர் – ‘மெட்ரோ போல’ MRTS.

மாநில அரசு வட்டாரத்தின் தகவலின்படி:

“இரண்டு ஆண்டுகளில் முழுமையான சீரமைப்பு முடிவடையும்.
2027 டிசம்பருக்குள் MRTS, ஒரு மெட்ரோ போன்ற அமைப்பாக செயல்படும்.”

CUMTA – 2048 போக்குவரத்து தொலைநோக்கு:

இந்த மாற்றம்,
சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA) வகுத்துள்ள நீண்டகால உத்தியின் ஒரு பகுதியாகும்.

2048க்குள் உச்ச நேர பயண நேரம் 90 நிமிடங்களில் இருந்து 60 நிமிடமாக குறைப்பு. மொத்த முதலீடு: ₹2.27 லட்சம் கோடி
அதில் ₹1.92 லட்சம் கோடி – பொதுப் போக்குவரத்துக்காக

வரலாற்றுப் பின்னணி:

MRTS திட்டம்.
1970களில் முதல்வர் மு. கருணாநிதி அவர்களால் கருத்தாக்கம்
1984ல் மு.ஜி.ஆர். அரசு அங்கீகாரம்
1995ல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது
2025 மே மாதம் நிதி ஆயோக் கூட்டத்தில்,
முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தை பிரதமர் மோடியிடம் நேரடியாக எடுத்துரைத்தார் அதன் பின்னரே ரயில்வே ஒப்புதல்கள் வேகமெடுத்தன

நகர்ப்புற போக்குவரத்தில் ஒரு மைல்கல்:

“இந்த ஒருங்கிணைப்பு,சென்னை மெட்ரோ, MRTS, புறநகர் ரயில் மற்றும் பேருந்து சேவைகளுக்கிடையே தடையற்ற பலமாதிரி போக்குவரத்தை உருவாக்கும்,”
~~தெற்கு ரயில்வே அதிகாரி….


✍️ ஷேக் முகைதீன்
இணை ஆசிரியர்

By TN NEWS