Sat. Jan 10th, 2026


கன்னியாகுமரியில் மனிதநேய காவல்துறை நடவடிக்கை
“Free Fire” அடிமையிலிருந்து மாணவனை மீட்ட ‘நிமிர்’ குழு கல்விக்குத் திரும்பிய சிறுவன் – பெற்றோர் பாராட்டு

கன்னியாகுமரி மாவட்டம், அம்மாண்டிவிளை பகுதியைச் சேர்ந்த, 9-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவன், கடந்த நான்கு மாதங்களாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்துள்ள சம்பவம், மாவட்ட காவல்துறையின் மனிதநேய நடவடிக்கையால் நல்ல முடிவை பெற்றுள்ளது.

இந்த தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து,
நிமிர் (The Rising Team) குழுவைச் சேர்ந்த
தலைமை பெண் காவலர்கள் – சுமிதா, விஜயலட்சுமி மற்றும் மலர்விழி ஆகியோர் உடனடியாக செயல்பட்டனர்.

☠️☠️💀“Free Fire” அடிமைத்தனம் கண்டறிதல்,

பள்ளிக்கு வராத மாணவனின் முகவரியை கண்டறிந்து, அவரது வீட்டிற்கே நேரில் சென்ற காவலர்கள்,
மாணவனை தனியாக அழைத்து விசாரித்தபோது,
😈“Free Fire” Mobile game-க்கு அடிமையாகி,
அதன் காரணமாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்தது தெரிய வந்தது.

தாயுள்ளத்தோடு கவுன்சிலிங்:

அந்த மாணவனிடம்,

இளம் வயதில் கல்வியின் முக்கியத்துவம்

படிப்பின் மூலம் உருவாகும் எதிர்கால வாய்ப்புகள்

அளவுக்கு மீறிய Mobile game பயன்பாட்டால் ஏற்படும்

மனநலம் பாதிப்பு

கவனம் சிதர்வு

சமூகத் தனிமை

ஆகியவற்றை தாயுள்ளத்தோடும், நண்பனின் மொழியிலும் விளக்கி, சிறந்த முறையில் கவுன்சிலிங் வழங்கினர்.

சீருடை அணிவித்து பள்ளிக்கு அழைத்துச் சென்ற காவலர்கள்

கவுன்சிலிங்கில் மனம் மாறிய சிறுவனை,

பள்ளி சீருடை அணிய வைத்து,

தங்களது இருசக்கர வாகனத்தில் நேரடியாக பள்ளிக்கு அழைத்துச் சென்று,

தொடர்ந்து இரண்டு நாட்கள் மாணவனின் நடத்தை மற்றும் பள்ளி வருகையையும் கண்காணித்து,
மாணவன் மீண்டும் தவறான பாதைக்கு செல்லாமல் பாதுகாத்தனர்.

பெற்றோர் நெகிழ்ச்சி:
தற்போது அந்த மாணவன்,விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு செல்வதாகவும்,
🥺Free Fire Mobile game-இல் இருந்து முழுமையாக விடுபட்டுள்ளதாகவும்,

மாணவனின் பெற்றோர் தெரிவித்தனர்.
மேலும், சிறுவர் – சிறுமியர்களின் பாதுகாப்பிற்காக ‘நிமிர்’ குழுவை உருவாக்கி, செயல்படுத்தி வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும், சம்பந்தப்பட்ட பெண் காவலர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

✨ இந்த செய்தி சொல்லும் முக்கியமான பாடம்.

🔹 மாணவர்களுக்கு:

Mobile game வாழ்க்கை அல்ல… கல்விதான் வாழ்க்கை.

🔹 பெற்றோருக்கு:

குழந்தைகளின் மௌனம், அடிமைத்தனமாக மாறலாம் – கவனியுங்கள்.

🔹 சமூகத்திற்கு:

காவல்துறை தண்டிக்க மட்டுமல்ல… திசைதிருப்பவும் இருக்கிறது.

🔹 காவல்துறைக்கு:

‘நிமிர்’ குழு – உண்மையான மனிதநேய காவல்துறையின் முகம்.

✍️ வி. மணிகண்டன் வேலாயுதன்

By TN NEWS