Sat. Jan 10th, 2026

100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்திற்கு எதிராக அரூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

100 நாள் வேலைத் திட்டத்தை அழித்து ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜக அரசையும், அதற்கு ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து,தருமபுரி கிழக்கு மாவட்டம் அரூர் சட்டமன்றத் தொகுதியில்,அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில்,மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம்,அரூர் நகரம், அரூர் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றியங்கள் சார்பில் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு,தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் – வழக்கறிஞர் ஆ. மணி, எம்.பி.தலைமையேற்று, ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கடுமையாக கண்டித்தார்.

கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பு:

இந்த போராட்டத்தில்,

காங்கிரஸ் மாவட்ட செயலாளர் – அ. வைரவன்

CPIM மாநில குழு உறுப்பினர் – A. குமார்

விசிக தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் – சாக்கன்சர்மா

திராவிட கழகம் – மாவட்ட துணை செயலாளர் வடிவேலன்

மதிமுக – மாவட்ட துணை செயலாளர் பட்டுராஜா

CPI – சிற்றரசுமனிதநேய மக்கள் கட்சி – மாவட்ட செயலாளர் இம்ரான்அரூர் நகர கழக செயலாளர் – முல்லைரவி
மேலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேடம்மாள்,
திமுக ஒன்றிய கழக செயலாளர்கள் – சந்திரமோகன், செளந்தரராசு, தென்னரசு, சந்தோஷ்குமார்,பேரூராட்சி துணைத் தலைவர் – சூர்யா,தனபால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு:

இந்த போராட்டத்தில், மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள்,
100 நாள் வேலைத் திட்ட பயனாளிகள்,பொதுமக்கள்,கழக மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் எனஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு,ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கடும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

✊ போராட்ட முழக்கம்

“தமிழ்நாடு போராடும்…
தமிழ்நாடு வெல்லும்!”

நமது நிருபர்.

By TN NEWS