Sat. Jan 10th, 2026

“100 நாள் வேலை – இனி இல்லை!”
ஒன்றிய பாஜக அரசு, ஒத்து ஊதும் அதிமுகவை கண்டித்து
ரிஷிவந்தியத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

100 நாள் வேலைத் திட்டத்தில் அண்ணல் மகாத்மா காந்தியடிகள் பெயரை நீக்கி, திட்டத்தையே ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜக அரசையும், அதற்கு ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து,
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம்,
ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட,
ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றியம் – வாணாபுரம் பகண்டை கூட்டுச்சாலையில்,ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில்,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்,
காங்கிரஸ் பேரியக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள்,
உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு,
100 நாள் வேலைத் திட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்றும்,
மகாத்மா காந்தியடிகள் பெயரை நீக்கிய நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில்
மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள்,
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தோழர்கள்,
பொதுமக்கள் என பலர் திரளாக கலந்து கொண்டு, ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.


✍️ V. ஜெய்சங்கர்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
தமிழ்நாடு டுடே – மக்கள் தொடர்பு அதிகாரி

By TN NEWS