Sat. Jan 10th, 2026

திருவள்ளூர் மாவட்டம் | ஊத்துக்கோட்டை.

ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ–மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) திரு. டி.ஜெ. கோவிந்தராஜன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு,

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 171 மாணவர்களுக்கும்,

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 203 மாணவிகளுக்கும்,

மொத்தம் 374 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

விழா தலைமையும் முன்னிலையும்,

இந்த நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் செந்தில் வள்ளி மற்றும் சுரேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

முன்னிலை வகித்தவர்கள்:

திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மூர்த்தி

பெற்றோர்–ஆசிரியர் கழகத் தலைவர்கள் சம்சுதீன், தமிழ்செல்வம்

ஊத்துக்கோட்டை பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத்

கவுன்சிலர்கள் கோல்டு மணி (எ) மணிகண்டன், திரிபுரசுந்தரி, சமீமா ரஹீம், கோகுல் கிருஷ்ணன், ஜீவா, வெங்கடேசன்

நிகழ்ச்சியில் பங்கேற்பு:

திமுக மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் ரவிக்குமார், ராஜேஷ்

ஊத்துக்கோட்டை இளைஞரணி அமைப்பாளர் ரஹீம்

லயன் திலீப் குமார், பரீத், பாபு, ரூபன், அருண்குமார், சந்தோஷ், பாரூக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, பெற்றோர்–ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஆசிரியர்–ஆசிரியைகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் விழாவில் பங்கேற்றனர்.

நன்றியுரை:

நிகழ்ச்சியின் இறுதியில், உதவி தலைமையாசிரியர் திருமதி சையத் பாத்திமா அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்
மா. மருதுபாண்டி.

By TN NEWS