Sat. Jan 10th, 2026


குடியாத்தம் | டிசம்பர் 22

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலை கல்லூரியில், கணிதத்துறை சார்பில் தேசிய கணித தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த விழா நடைபெற்றது.

விழாவின் ஒரு பகுதியாக மாணவ, மாணவிகளுக்காக பல்வேறு கணிதப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் பங்கேற்றோர்:

இந்த நிகழ்ச்சிக்கு
கல்லூரி முதல்வர் முனைவர் எபெனேசர் அவர்கள் தலைமை தாங்கினார்.

கணிதத் துறை தலைவர் முனைவர் செ. கருணாநிதி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

சிறப்பு விருந்தினர் உரை:

விழாவில் சிறப்பு விருந்தினராக V.I.T. பல்கலைக்கழக கணிதத் துறை பேராசிரியர் முனைவர் எழில்மாறன் அவர்கள் கலந்து கொண்டு,
கணித மேதை ராமானுஜம் அவர்களின் வாழ்க்கை, சாதனைகள் மற்றும் கணிதத்துறைக்கு அவர் அளித்த பங்களிப்பு குறித்து சிறப்புரை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கணிதத் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS