சின்னசேலம் | கள்ளக்குறிச்சி மாவட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் நகரைச் சேர்ந்த, தள்ளுவண்டியில் காய்கறிகள் விற்பனை செய்து வரும் லூர்து சவரி ராஜன், தனது கடின உழைப்பாலும், கட்டுப்பாட்டான வாழ்க்கை முறையாலும் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்.
குடும்ப சூழ்நிலை காரணமாக எட்டாம் வகுப்பிற்கு மேல் கல்வியை தொடர முடியாதவர் என்றாலும், வாழ்க்கையில் தன்னம்பிக்கையை இழக்காமல்,
மது, புகை உள்ளிட்ட எந்தவித தீய பழக்கங்களுக்கும் ஆளாகாமல்,
தன் உடலை பச்சிளம் குழந்தையைப் போல பாதுகாத்து வருபவர் லூர்து சவரி ராஜன்.
கடின உழைப்பின் பலன்:
தினமும் உடற்பயிற்சி கூடத்தில் அர்ப்பணிப்புடன் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு,
உடற்பயிற்சியை வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றியுள்ள அவர்,
ஞாயிற்றுக்கிழமை (21.12.2025) கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற BODY BUILDING COMPETITION-இல்,
நூலிழையில் முதல்பரிசை தவறவிட்டு, இரண்டாம் பரிசை வென்று, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இளைஞர்களுக்கு ஒரு செய்தி:
எளிய வாழ்க்கை, நேர்மையான உழைப்பு,
ஒழுக்கமான பழக்கங்கள்,
மற்றும் தொடர்ந்த முயற்சி —
இவையே வெற்றியின் அடையாளம் என்பதை லூர்து சவரி ராஜனின் வாழ்க்கை எடுத்துக்காட்டுகிறது.
அவரது இந்த சாதனைக்கு,
சின்னசேலம் பகுதி பொதுமக்களும், இளைஞர்களும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம்
V. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி


