Sat. Jan 10th, 2026

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் கிராமம் அருகே, மணி நதியாற்றுப் பாதை பாலத்தருகே நமது தேசியப் பறவையான இரண்டு மயில்கள் மரணமடைந்து கிடந்தது, வனவிலங்கு பாதுகாப்பு குறித்து கடும் கவலைகளை எழுப்புகிறது.

மயில் என்பது வெறும் பறவை அல்ல. அது இந்தியாவின் அடையாளம், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முழுமையாக பாதுகாக்கப்படும் உயிரினம்.

இரண்டு நாட்கள் யாருக்கும் தெரியாமல் இருந்ததா?

பறவைகள் இறந்து கிடந்து இரண்டு நாட்கள் வரை யாருடைய கவனத்திற்கும் வராமல் இருந்திருக்கலாம் என்ற தகவல்,
அப்பகுதியில் வனத்துறை கண்காணிப்பு நடைமுறை எவ்வாறு செயல்படுகிறது? என்ற கேள்வியை எழுப்புகிறது.

விவசாய நிலங்கள், ஆற்றுப் பாதைகள், கிராமப்புறங்கள் —
இவை அனைத்தும் வனவிலங்குகள் இயல்பாக நடமாடும் பகுதிகள். அப்படியான சூழலில், கள ஆய்வு, கிராம கண்காணிப்பு உடனடி தகவல் சேகரிப்பு, என்ற அடிப்படை நடைமுறைகள் செயல்பட வேண்டாமா?

விஷ மருந்துகள் — மறைக்கப்பட்ட ஆபத்து:

விவசாயப் பயிர்களை பாதுகாக்க பயன்படுத்தப்படும் இடுபொருள் மருந்துகள், ரசாயன விஷங்கள்,
வனவிலங்குகளுக்கு மௌன மரணத்தை ஏற்படுத்தும் அபாயமாக மாறி வருகிறது.

இது விவசாயிகளின் தவறா?
அல்ல, பாதுகாப்பான மாற்று வழிகளை வழங்காத நிர்வாகத் தோல்வி. விஷ மருந்துகளின் பயன்பாட்டை கண்காணிக்காதது வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் பகுதிகளை அடையாளம் காணாதது விழிப்புணர்வு ஏற்படுத்தாதது.

இவை அனைத்தும் நிர்வாகப் பொறுப்பின்மை என்றே பார்க்கப்படுகிறது. வனத்துறை மௌனம் ஆபத்தானது
தேசியப் பறவை மரணமடைந்த பின்னரும், உடனடி Post-mortem, மரணக் காரணம் குறித்த வெளிப்படையான அறிக்கை, சட்ட நடவடிக்கை இவை தாமதமாகும் பட்சத்தில்,
அது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் ஆன்மாவுக்கே எதிரானது.

இது ஒரு கிராமப் பிரச்சினை அல்ல;

இது, உயிரியல் சமநிலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எதிர்கால தலைமுறையின் இயற்கை உரிமை, இவைகளோடு தொடர்புடைய பொது சமூகப் பிரச்சினை.

ஒரு மயில் இறந்தால், அது ஒரு செய்தி அல்ல, ஒரு எச்சரிக்கை. இப்போது செய்ய வேண்டியது. வனத்துறை உடனடி கள ஆய்வு, மரணக் காரணம் குறித்து பொது அறிக்கை, விஷ மருந்துகள் பயன்பாட்டில் கட்டுப்பாடு கிராம அளவில் wildlife awareness, தொடர்ச்சியான கண்காணிப்பு, தேசியப் பறவையை காப்பது கருணை அல்ல, கடமை மயில்களை பாதுகாப்பது
விருப்பம் அல்ல. சட்டப் பொறுப்பு. நிர்வாகக் கடமை. சமூக பொறுப்புணர்வு.

இந்த மரணம், வனத்துறையையும், நிர்வாகத்தையும்
செயலில் இறங்க வைக்கும் திருப்புமுனையாக மாற வேண்டும்.

V. ஜெய்சங்கர்

மக்கள் தொடர்பு அதிகாரி

கள்ளக்குறிச்சி மாவட்டம்

By TN NEWS